கடந்த சில வாரங்களாகத் தான் ஏற்றம் காணத் தொடங்கியது சென்செக்ஸ். ஆனால் இன்று செமத்தியாக அடி விழுந்து இருக்கிறது
இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,011 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு இருக்கிறது.
இன்று இந்திய சந்தைகள் மற்றும் உலக சந்தைகளின் நிலவரம் என்ன? டாலர் கச்சா எண்ணெய் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
சென்செக்ஸ்
நேற்று மாலை, 31,648 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 30,836 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. அதிகபட்சமாக 30,900 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் வர்த்தக நேர முடிவில் 30,636 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைந்து இருக்கிறது. ஆக நேற்றைய குளோசிங்கில் இருந்து இன்றைய குளோசிங் புள்ளியை கணக்கிட்டால் 1,011 புள்ளிகள் இறக்கத்தில் நிறைவடைந்து இருக்கிறது.
பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 03 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் 2,565 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 736 பங்குகள் ஏற்றத்திலும், 1,675 பங்குகள் இறக்கத்திலும், 154 பங்குகள் விலை மாற்றம் இன்றியும் வர்த்தகமாயின. இதில் 25 பங்குகள் 52 வார விலை உச்சத்தையும் தொட்டது குறிப்பிடத்தக்கது.
டாலர் & கச்சா எண்ணெய்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76.83 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்று அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் ஃப்யூச்சர்ஸின் விலை -37 டாலரைத் தொட்டது என்றால், தற்போது ஒரு பேரல் விலை சுமாராக -4 டாலருக்கு வர்த்தகமாகிறது. பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமாராக 21.16 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
உலக சந்தைகள்
நேற்று ஏப்ரல் 20, 2020 அன்று அமெரிக்காவின் நாஸ்டாக் 1.03 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்ரு ஏப்ரல் 21, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 2.11 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதே போல பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.65 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 2.90 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பங்குகள்
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், பர்தி இன்ஃப்ராடெல், பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப், சிப்லா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஜி எண்டர்டெயின்மெண்ட், ஹிண்டால்கோ போன்ற பங்குகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications