நேற்று 646 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், இன்று எப்படியும் 39,000 புள்ளிகளைக் கடந்து விடும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஏற்றமும் காணாமல், இறக்கமும் காணாமல், வெறும் 14 புள்ளிகள் ஏற்றம் கண்டு 38,854 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
நேற்று மாலை, சென்செக்ஸ் 38,840 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 38,865 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 38,978 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 38,711 புள்ளிகளையும் தொட்டு வர்த்தகமானது சென்செக்ஸ்.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 38,854 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்றைக்கான சென்செக்ஸ் சார்ட்டைப் பார்த்தால் ஒரு டோஜி கேண்டில் உருவாகி இருக்கிறது.
டோஜி கேண்டில்
டோஜி கேண்டில் உருவானால் சென்செக்ஸ் ஏற்றம் காணப் போகிறதா அல்லது இறக்கம் காணப் போகிறதா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அதாவது சந்தையில் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் இருவருமே சம பலத்துடன் இருக்கிறார்கள் என்று பொருள். வாங்குபவர்கள் கை ஓங்கினால் சந்தை ஏற்றம் காணும், விற்பவர்கள் கை ஓங்கினால் சந்தை இறக்கம் காணும். சரி, இன்றைய சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகள் நிலவரம் என்ன?
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 10 பங்குகள் விலை ஏற்றத்திலும், 20 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் மொத்தம் 2,872 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,413 பங்குகள் ஏற்றத்திலும், 1,271 பங்குகள் விலை இறக்கத்திலும், 188 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 107 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், எஸ் பி ஐ, டி சி எஸ், டெக் அஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமானது.
இண்டஸ் இண்ட் பேங்க், பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஏஷியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஐரோப்பிய & ஆசிய சந்தைகள்
இன்று (11 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.44 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.07 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.15 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஆசிய சந்தைகளில் சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி & ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், தைவானின் தைவான் வெயிடெட், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் போன்ற சந்தைகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications