சென்செக்ஸ்-க்கு செண்டிமெண்டாகவே 39,000 புள்ளிகள் ஒரு மாய எண்ணாக இருந்தது. இப்போதும் 39,000 புள்ளிகளைத் தொட முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் கம்பெனிகள் வழக்கம் போல செயல்பட்டு, வருமானத்தை ஈட்ட முடியாமல் தவிப்பதும் ஒரு முக்கிய காரணம்.
அதைத் தாண்டி சென்செக்ஸை உயரத்துக்கு எடுத்துச் செல்ல அரசு தரப்பில் இருந்தோ அல்லது தொழில் துறையிடம் இருந்தோ வலுவான செய்திகள் அதிகம் வெளியாகவில்லை. சரி இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 12 பங்குகள் ஏற்றத்திலும், 18 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,477 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,213 பங்குகள் ஏற்றத்திலும், 1,160 பங்குகள் இறக்கத்திலும், 104 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 119 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
சென்செக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நேற்று மாலை 38,407 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 38,321 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,125 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது நேற்றைய குளோசிங் புள்ளிகளை விட 282 புள்ளிகள் இறக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கு விலை நிலவரம்
எஸ் பி ஐ, அதானி போர்ட்ஸ், ஜி எண்டர்டெயின்மெண்ட், மஹிந்திரா & மஹிந்திரா, ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஹிண்டால்கோ, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், சிப்லா, பி பி சி எல், விப்ரோ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று 12 ஆகஸ்ட் 2020, ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 1.58 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
உலக பங்குச் சந்தைகள்
11 ஆகஸ்ட் 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 1.69 % இறக்கத்தில் வர்த்தகமானது. 12 ஆகஸ்ட், 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.71 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.41 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.04 % ஏற்றத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.


Click it and Unblock the Notifications