297 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகும் சென்செக்ஸ்! பங்குச் சந்தை நிலவரம் என்ன?

கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 2.8 % சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமை மாலை, சென்செக்ஸ் 38,357 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இன்று காலை சென்செக்ஸ் 38,284 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 38,454 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. அதன் பின், 38,060 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு இருக்கிறது சென்செக்ஸ்.

இன்று சென்செக்ஸில் நிலவரம் என்ன? ஆசிய பங்குச் சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன? எந்த இண்டெக்ஸ் எப்படி வர்த்தகமாகின்றன? வாருங்கள் பார்ப்போம்.

297 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகும் சென்செக்ஸ்! பங்குச் சந்தை நிலவரம் என்ன?

இண்டெக்ஸ்

இன்று எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக ஆட்டோமொபைல், மீடியா, பார்மா, தனியார் வங்கி, ரியாலிட்டி போன்ற செக்டார்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த செக்டார்கள், சென்செக்ஸின் இறக்கத்துக்கும் முக்கிய காரணமாக இருக்கின்றன.

சென்செக்ஸ் 30-ல் பங்கு விலை நிலவரம்

ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன், நெஸ்ட்லே, டி சி எஸ்
போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா, ஓ என் ஜி சி
போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 12 பங்குகள் ஏற்றத்திலும், 18 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,412 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 963 பங்குகள் ஏற்றத்திலும், 1,308 பங்குகள் விலை இறக்கத்திலும், 141 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 79 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.

ஆசிய பங்குச் சந்தைகள்

இன்று (7 செப்டம்பர் 2020), ஆசியாவில், சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், தென் கொரியாவின் கோஸ்பி தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம், இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஜப்பானின் நிக்கி, தைவானின் தைவான் வெயிடெட் போன்ற பங்குச் சந்தைகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+