யாரும் எதிர்பார்க்காத வண்ணத்தில், சென்செக்ஸ் ரிவர்ஸ் கியர் போட்டு, இன்று 37,736 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.
21 ஜூலை 2020-க்குப் பிறகு, இத்தனை நாட்களாக, 37,750 புள்ளிகளுக்கு மேலே வர்த்தகம் நிறைவடைந்ததே இல்லை. தொடர்ந்து நல்ல ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ், இன்று ஒரு பெரிய சரிவைக் கண்டு இருக்கிறது.
சரி சென்செக்ஸ் நிலவரம் என்ன? இண்டஸ் இண்ட் பேங்க்-க்கு என்ன ஆச்சு? விலை ஏறிய பங்குகள் என்ன? ஐரோப்பிய சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன? வாருங்கள் எல்லாவற்றையும் பார்ப்போம்.
இண்டஸ் இண்ட் பேங்க்
ஹிந்துஜா குழுமத்தின் இந்திய வங்கியான இண்டஸ் இண்ட் பேங்கின் ஜூன் காலாண்டு முடிவுகள் வெளியாயின. அதில் நிகர லாபம், கடந்த ஜூன் 2019 காலாண்டை விட 67.8 % சரிந்து இருக்கிறது. அதோடு 3,288 கோடி ரூபாய் முதல் திரட்ட இருக்கும் செய்தியும் வெளியாகி இருக்கிறது. இந்த வங்கி மோசமான கடன்களுக்கான ப்ரொவிசனாக 2,258 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறதாம்.
பங்கு விலையில் எதிரொலி
இந்த செய்திகள் எல்லாம் சேர்ந்து, இண்டஸ் இண்ட் பேங்கின் விலையில் கொஞ்சம் பலமாகவே எதிரொலித்து இருக்கிறது. 29 ஜூலை அன்று 555 ரூபாய் வரை தொட்டு வர்த்தகமான இண்டஸ் இண்ட் பேங்க் பங்கு விலை, இன்று வர்த்தக நேர முடிவில் 521 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சுமாராக 5.3 % விலை சரிந்து இருக்கிறது.
சென்செக்ஸ் 30 பங்குகள்
சென்செக்ஸ் இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 08 பங்குகள் விலை ஏற்றத்திலும், 22 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,812 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,023 பங்குகள் விலை ஏற்றத்திலும், 1,631 பங்குகள் விலை இறக்கத்திலும், 158 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
எந்த பங்குகள் விலை அதிகரித்தன
டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், சன் பார்மா, விப்ரோ, மாருதி சுசூகி, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. பி பி சி எல், இண்டஸ் இண்ட் பேங்க், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹெச் டி எஃப் சி, ஆக்ஸிஸ் வங்கி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள்
30 ஜூலை 2020 அன்று, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.82 % இறக்கத்தில் வர்த்தகமாகிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.46 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.64 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆக ஐரோப்பிய சந்தைகள் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. ஆசியாவிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். ஆக சென்செக்ஸ் இறக்கம் கண்டதில் ஒன்றும் பெரிய ஆச்சர்யம் இல்லை.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications