நேற்று சென்செக்ஸ், கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, தன் உச்ச புள்ளியாக 38,225 புள்ளிகளைத் தொட்டது.
நேற்று வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 38,140 புள்ளிகளில் நிறைவடைந்தது. ஆனால் இன்று சென்செக்ஸ் அதிகபட்சமாகவே 38,001 புள்ளிகளைத் தான் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சரியாக சொல்ல வேண்டுமானால், சென்செக்ஸ் 38,000 புள்ளிகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.
ஆசிய சந்தைகள்
இன்று 24 ஜூலை 2020, ஆசியாவில், எல்லா பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஹாங்காங்கிங் ஹேங் செங் பங்குச் சந்தை 2.22 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 2.58 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
உலக பங்குச் சந்தைகள்
உலக பங்குச் சந்தைகள்
23 ஜூலை 2020 அன்று, அமெரிக்க நாஸ்டாக் பங்குச் சந்தை 2.29 % இறக்கத்தில் வர்த்தகமானது. 23 ஜூலை, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.07 % ஏற்றத்த்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.07 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.01 % இறக்கத்திலும் வர்த்தகமானது. ஆக ஐரோப்பிய சந்தைகள் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.
சென்செக்ஸ்
நேற்று சென்செக்ஸ், 38,140 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,949 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 37,804 புள்ளிகளைத் தொட்டு இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. மீண்டும் சென்செக்ஸ் 38,000 புள்ளிகளில் மல்லுகட்டிக் கொண்டு இருப்பதாகவே தெரிகிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 04 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 26 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,309 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 691 பங்குகள் ஏற்றத்திலும், 1,508 பங்குகள் இறக்கத்திலும், 110 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக மும்பை பங்குச் சந்தையில், 80 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.
பங்கு விலை நிலவரம்
ரிலையன்ஸ், சன் பார்மா, விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஜி எண்டர்டெயின்மெண்ட், ஹிண்டால்கோ, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ் பி ஐ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications