359 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்! 38,000-க்கு மேல் நிறைவடையுமா?

கடந்த வாரம் சென்செக்ஸ் 37,000 புள்ளிகளில் இருந்து நேராக 38,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வார இறுதியில் 38,128 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

சரி எப்படியும் இந்த வாரத்தில் சென்செக்ஸ் ஒரு 38,500-க்கு மேல் தொடங்கி வர்த்தகமாகும் என எதிர்பார்த்தால், சென்செக்ஸ், ஆரம்பத்திலேயே நொண்டி அடிக்கத் தொடங்கி இருக்கிறது.

தற்போது சென்செக்ஸ் 359 புள்ளிகள் சரிந்து 37,769 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. சென்செக்ஸ் நிலவரம் என்ன? எந்த பங்குகளின் விலை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. எந்த பங்குகளின் விலை சரிந்து கொண்டு இருக்கின்றன? ஆசிய சந்தைகள் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

இன்று 27 ஜூலை 2020, ஆசியாவில், தைவான் வெயிடெட், தென் கொரியாவின் கோஸ்பி, இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக தைவானின் தைவான் வெயிடெட் 2.40% ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

24 ஜூலை 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 0.94 % இறக்கத்தில் வர்த்தகமானது. 24 ஜூலை, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.41 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.54 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.02 % இறக்கத்திலும் வர்த்தகமானது. ஆக அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகள் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. அதான் சென்செக்ஸும் தடுமாறுகிறது போல.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ், 38,128 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,275 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 37,769 புள்ளிகளைத் தொட்டு 359 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. மீண்டும் சென்செக்ஸ் 38,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் நிறைவடையுமா..? என்கிற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 13 பங்குகள் ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,336 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 690 பங்குகள் ஏற்றத்திலும், 1,529 பங்குகள் இறக்கத்திலும், 117 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, இதுவரை மும்பை பங்குச் சந்தையில், 84 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

ஏஷியன் பெயிண்ட்ஸ், பி பி சி எல், ஹெச் சி எல் டெக், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஐசிஐசிஐ பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், சன் பார்மா, ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

38,000

38,000

உலக சந்தைகள் எல்லாம் கடந்த வெள்ளிக்கிழமை சரிந்து இருப்பது, மும்பை பங்குச் சந்தையில் பெரும்பாலான பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாவது, அதிகரித்து வரும் கொரோனா பிரச்சனை போன்ற காரணங்களால் சென்செக்ஸ் 38,000 புள்ளிகளைக் கடந்து நிறைவடைவது சிரமமாகத் தான் தெரிகிறது. ஆனால் ஏதாவது வலுவான நல்ல செய்தி வந்தால் சென்செக்ஸ் 38,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+