38,000 புள்ளிகளைத் தொட முடியாமல் தடுமாறும் சென்செக்ஸ்! 41 புள்ளிகள் இறக்கத்தில் சந்தை!

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாள் இது. இந்த வாரத்தில் முதல் வர்த்தக நாள் மட்டுமே 592 புள்ளிகள் ஏற்றம் கண்டது நேற்று வெறும் 8 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்தது.

இன்றும் சென்செக்ஸ் ஒரு நல்ல ஏற்றத்தைக் காண முடியாமல் 38,000 புள்ளிகளிலேயே தடுமாறிக் கொண்டு இருக்கிறது.

நேற்று மாலை 37,973 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 38,068 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. இதுவரை உச்சபட்சமாக 38,080 புள்ளிகள் வரை தொட்டு இருக்கிறது.

41 புள்ளிகள் டவுன்

41 புள்ளிகள் டவுன்

தற்போது, நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 41 புள்ளிகள் இறக்கம் கண்டு 37,931 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகளின் நிலவரம் என்ன? aஅசிய & ஐரோப்பிய பங்குச் சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன? வாங்க பாப்போம்.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. 14 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,095 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 996 பங்குகள் ஏற்றத்திலும், 976 பங்குகள் விலை இறக்கத்திலும், 123 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 57 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.

இண்டெக்ஸ்

இண்டெக்ஸ்

இன்று ஆட்டோமொபைல், எஃப் எம் சி ஜி, ஐடி, மீடியா, பார்மா தவிர, மற்ற எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி, ம்ெட்டல், போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் கொஞ்சம் பலத்த இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இது ஒட்டு மொத்த சென்செக்ஸ் தடுமாற்றத்துக்கு காரணமாக இருக்கின்றன.

ஆசிய பங்குச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகள்

இன்று (30 செப்டம்பர் 2020) ஆசியாவில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஜப்பானின் நிக்கி, தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் பங்குச் சந்தைகள் தவிர மற்ற முக்கிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக தென் கொரியாவின் கோஸ்பி 0.86 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள்

அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள்

நேற்று (29 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.51 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.23 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.35 % இறக்கத்திலும் வர்த்தகமானது. அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 0.29 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+