நேற்று சென்செக்ஸ் காலை 34,841 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, மாலை 34,370 புள்ளிகளில் நிறைவடைந்த போதே சென்செக்ஸ் பலவீனமாக இருப்பதைக் காட்டியது.
அந்த பலவீனம், இன்று சென்செக்ஸ் இறக்கமாக பிரபலித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று சென்செக்ஸ் நிலவரம் என்ன? உலக சந்தைகள் எப்படி வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன..? ஏற்ற இறக்கப் பங்குகள் விவரங்கள் என ஒரு ரவுண்ட் அப் பார்ப்போம் வாங்க.
சென்செக்ஸ்
நேற்று மாலை சென்செக்ஸ், 34,370 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 34,520 புள்ளிகளில், சிறிய கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தக நேர முடிவில் 33,956 புள்ளிகளைத் தொட்டு 413 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சென்செக்ஸ், தொடர்ந்து 3 நாட்கள் ஏற்றத்துக்குப் பின், இன்று இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
1 நாள் சார்ட்
சென்செக்ஸின் 1 நாள் டெக்னிக்கல் சார்ட்டைப் பார்த்து, சென்செக்ஸ் 34,770 புள்ளிகளைத் தொடலாம் எனச் சொல்லி இருந்தோம். நேற்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 34,927 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. ஆனால் தொடர்ந்து மேல் நோக்கி வர்த்தகமாக, சந்தையில் வலுவான செய்திகளோ காரணங்களோ இல்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.
35000 புள்ளிகள்
அதே போல 1 நாள் சார்ட்டில், கொரோனாவுக்குப் பிறகான சரிவு காலத்தில் கூட சென்செக்ஸ் 35,109 புள்ளிகள் வரை மெல்ல சரிந்த சென்செக்ஸ், அதன் பின் நேரடியாக 34,472 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. எனவே 35,000 புள்ளிகளை சென்செக்ஸ் கடப்பது அத்தனை எளிதல்ல. ஆனால், பங்குச் சந்தைக்கு வலு சேர்க்கும் விதத்தில், நல்ல செய்திகள் வந்தால் விரைவில் கடக்கலாம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 09 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,749 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,117 பங்குகள் ஏற்றத்திலும், 1,459 பங்குகள் இறக்கத்திலும், 173 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மும்பை பங்குச் சந்தையில், சுமாராக 66 பங்குகள் தன் 52 வார கால உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமாகி இருக்கின்றன.
உலக பங்குச் சந்தைகள்
உலக பங்குச் சந்தைகள்
ஜூன் 09, 2020 இன்று லண்டனின் எஃப் டி எஸ் இ 1.63 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.85 % இறக்கத்திலும், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஜெர்மனி பங்குச் சந்தை 1.93 % இறக்கத்திலும், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் தடுமாற்றம், இந்திய சந்தைகளிலும் எதிரொலித்து இருக்கிறது. அதனால் தான் சென்செக்ஸ் இன்று இறக்கம் கண்டு இருக்கிறது.
பங்கு விலை நிலவரம்
ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், இண்டஸ் இண்ட் பேங்க், சன் பார்மா, மஹிந்திரா & மஹிந்திரா, பார்தி இன்ஃப்ராடெல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. விப்ரோ, கெயில், டாடா மோட்டார்ஸ், பாரத் பெட்ரோலியம், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications