கடந்த சில வர்த்தக நாட்களாகவே, சென்செக்ஸுக்கு காய்ச்சல் வந்தது போல ஏற்ற இறக்கத்துடனேயே வர்த்தாமாகிக் கொண்டு இருக்கிறது.
இன்று, காலை முதலே சென்செக்ஸ் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக 35,000 புள்ளிகளை விட்டு கீழே சரிந்து இருக்கிறது.
சரி சென்செக்ஸில் நிலவரம் என்ன? எந்த பங்குகள் எல்லாம் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது? உலக பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
சென்செக்ஸ்
நேற்று மாலை சென்செக்ஸ், 35,171 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 34,926 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 34,727 புள்ளிகளைத் தொட்டு 444 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 35,000 புள்ளிகளுக்கு கொஞ்சம் தூரத்தில் இருப்பது மட்டுமே ஆறுதலான விஷயம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 05 பங்குகள் ஏற்றத்திலும், 25 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,194 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 769 பங்குகள் ஏற்றத்திலும், 1,343 பங்குகள் இறக்கத்திலும், 82 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக பங்குச் சந்தைகள்
26 ஜூன் 2020 அன்று, அமெரிக்க நாஸ்டாக் பங்குச் சந்தை இறக்கத்திலேயே வர்த்தகமானது. ஜூன் 26, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.20 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.18 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.73 % இறக்கத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
ஆசியாவில் எல்லா பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, ஜப்பானின் நிக்கி பங்குச் சந்தை 2.09 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த ஆசிய சந்தை சரிவு கூட, இந்திய சந்தைகளின் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
பங்கு விலை நிலவரம்
ஐ டி சி, நெஸ்ட்லே, சிப்லா, பிரிட்டானியா, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆக்ஸிஸ் இந்தியா, கோல் இந்தியாம் இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிண்டால்கோ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications