காலையில் 35,223 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமான சென்செக்ஸ், வர்த்தகம் நிறைவடையும் போது, 34,915 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைந்து இருக்கிறது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து, சென்செக்ஸ் 35,000 புள்ளிகளைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது.
இன்றாவது தொட்டு விடும் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே விடையாகக் கிடைத்து இருக்கிறது. சரி சென்செக்ஸ் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலை என்ன
நேற்று மாலை சென்செக்ஸ், 34,961 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 35,168 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் 34,812 புள்ளிகள் வரைத் தொட்டு பய முறுத்தியது. ஆனால் வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ், கொஞ்சம் ஏற்றம் கண்டு 34,915 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் உடன் ஒப்பிட்டால் 45 புள்ளிகள் இறக்கம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 14 பங்குகள் ஏற்றத்திலும், 16 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,900 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,258 பங்குகள் ஏற்றத்திலும், 1,513 பங்குகள் இறக்கத்திலும், 129 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 132 பங்குகள் தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது.
உலக பங்குச் சந்தைகள்
இன்று, ஜூன் 30, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 0.68 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.15 சதவிகிதம் இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.25 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசியாவில் எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. இருப்பினும் சென்செக்ஸ் 45 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.
பங்கு விலை நிலவரம்
ஸ்ரீ சிமெண்ட்ஸ், மாருதி சுசூகி, நெஸ்ட்லி, ஐ சி ஐ சி ஐ பேங்க், பிரிட்டானியா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பி பி சி எல், ஐ ஒ சி, பவர் கிரிட், சன் பார்மா, யூ பி எல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications