சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்! 37151 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்!

கடந்த வாரம் சென்செக்ஸ் 1.4 சதவிகிதம் இறக்கம் கண்டு இருக்கிறது. சரி ஆகஸ்ட் 2020 மாதத்தில் முதல் வாரத்தின் முதல் வர்த்தக நாளில் எப்படியும் மீண்டும் 38000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகும் என்று எதிர்பார்த்தால், ஆரம்பத்திலேயே சென்செக்ஸ் 37,151 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது.

இத்தனை நாட்களாக சென்செக்ஸை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த முக்கிய பங்குகளில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் தற்போது 2.02 சதவிகிதம் சரிரில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

சென்செக்ஸ் நிலவரம் என்ன? எந்த பங்குகளின் விலை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. எந்த பங்குகளின் விலை சரிந்து கொண்டு இருக்கின்றன? ஆசிய சந்தைகள் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம், ஜூன் 2020 காலாண்டில் ஈட்டிய நிகர லாபத்தில், கணிசமான அளவுக்கு மற்ற வழிகளில் இருந்து வந்தவை. அதோடு ரிலையன்ஸின் பங்கின் விலை, தன் மதிப்பீட்டை (Valuation) விட அதிகமாக இருப்பதாக, CLSA & எடல்வீஸ் ஆகியவர்களும் சொல்லி இருந்தார்கள். இந்த செய்திகள் எல்லாம் தற்போது ரிலையன்ஸ் பங்கு விலையை குறைக்கத் தொடங்கி இருக்கிறது.

RIL பங்கு விலை நிலவரம்

RIL பங்கு விலை நிலவரம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கடந்த 28 ஜூலை 2020 அன்று 2,198 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் அதற்குப் பின், இந்த பங்கின் விலை, தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. தற்போது 2009 ரூபாய் வரை விலை சரிவைக் கண்டு இருக்கிறது. எனவே ரிலையன்ஸ் பங்கில் முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக முதலீடு செய்யவும்.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

03 ஆகஸ்ட் 2020, ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற எல்லா ஆசிய பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஜப்பானின் நிக்கி 2.32 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

31 ஜூலை 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 1.49 % ஏற்றத்தில் வர்த்தகமானது. 24 ஜூலை, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.54 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.43 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.54 % இறக்கத்திலும் வர்த்தகமானது. ஆக அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகள் தடுமாறிக் கொண்டு இருபப்து வெளிப்படையாகத் தெரிகிறது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ், 37,606 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,595 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 37,151 புள்ளிகளைத் தொட்டு 455 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. மீண்டும் சென்செக்ஸ் 38,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் நிறைவடையுமா..? அது சென்செக்ஸ் சந்தைக்கு தான் வெளிச்சம்.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 04 பங்குகள் ஏற்றத்திலும், 26 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,399 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,218 பங்குகள் ஏற்றத்திலும், 1,024 பங்குகள் இறக்கத்திலும், 157 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, இதுவரை மும்பை பங்குச் சந்தையில், 110 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

டாடா மோட்டார்ஸ், டைடன் கம்பெனி, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. யூ பி எல், ஹெச் டி எஃப் சி லைஃப், இண்டஸ் இண்ட் பேங்க், கோட்டக் மஹிந்திரா, ரிலையன்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+