இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான செய்தியில், சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்குள் தான் ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருவதகச் சொல்லி இருந்தோம்.
ஒட்டு மொத்தமாக இன்றைக்கு, சென்செக்ஸ் 276 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் காணவில்லை. ஏகப்பட்ட பங்குகள் சர சரவென விலை இறக்கம் கண்டு இருக்கின்றன.
இன்று சென்செக்ஸ் எப்படி வர்த்தகமானது? உலக சந்தைகள் எப்படி வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? எந்த பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின? வாருங்கள் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலை என்ன
நேற்று மாலை சென்செக்ஸ், 35,430 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 35,679 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் 35,706 புள்ளிகள் வரைத் தொட்டது. ஆனால் ஏற்றம் நிலைக்கவில்லை. சென்செக்ஸ். வர்த்தக நேர முடிவில் 34,868 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் உடன் ஒப்பிட்டால் 561 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் வெறும் 06 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 24 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. கடந்த சில வர்த்தக நாட்களில் நன்றாக விலை ஏற்றம் கண்ட பங்குகள் எல்லாம் இன்று தடுமாறின. பிஎஸ்இ-யில் 2,863 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,222 பங்குகள் ஏற்றத்திலும், 1,511 பங்குகள் விலை இறக்கத்திலும், 130 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
உலக பங்குச் சந்தைகள்
ஜூன் 24, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 2.08 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.73 சதவிகிதமும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.77 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசியாவில் கலவையாகவே வர்த்தகமாயின. தைவான், கொரியா, ஜகர்தா, சீனா போன்ற பங்குச் சந்தைகள் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
இண்டெக்ஸ்
நிஃப்டியின் செக்டோரியல் இண்டெக்ஸில் இன்று, எல்லா துறை சார் இண்டெக்ஸ்களும் செம இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. FMCG துறை சார் இண்டெக்ஸ் மட்டுமே ஒரே ஆறுதல். வங்கி, நிதி சேவைகள், மீடியா, மெட்டல், பார்மா, ரியாலிட்டி என எல்லாமே இரண்டு சதவிகிதத்துக்கு மேல் சரிந்து இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
ஏஷியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, ஹீரோ மோட்டோ கார்ப், ஈஷர் மோட்டார்ஸ், கெயில் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், பவர் கிரிட் கார்ப், ஹிண்டாஒகோ, சிப்லா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications