இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களும், இதோ இப்போது சென்செக்ஸ் 33,000-ஐ கடக்கும், அப்போது கடந்து விடும் என காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில், சென்செக்ஸை 31,000 புள்ளிகளுக்கு மேல் கொண்டு செல்ல கூட, வலுவான செய்திகள் இல்லை என்பது தான் நிதர்சனமாக இருக்கிறது.

கடந்த 18-5-2020 அன்று சென்செக்ஸ் 31,248 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் அதற்குப் பின் இன்று வரை சென்செக்ஸ் 31,000 புள்ளிகளைத் தாண்ட முடியாமல் முக்கிக் கொண்டு இருக்கிறது. இதில் எங்கிருந்து 33,000 புள்ளிகளை சென்செக்ஸ் கடக்கும் என நம்பிக்கை கொள்வது. சரி இன்று சென்செக்ஸில் என்ன ஆச்சு? மற்ற சந்தை மற்றும் சந்தை சார் கள நிலவரங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலவரம்
மே 22, 2020 மாலை சென்செக்ஸ், 30,672 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 30,864 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸின் குறைந்தபட்ச புள்ளியாக 30,512 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. வர்த்தக நேர முடிவில் 30,609 புள்ளிகளைத் தொட்டு 622 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,534 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,225 பங்குகள் ஏற்றத்திலும், 1,123 பங்குகள் இறக்கத்திலும், 186 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
உலக பங்குச் சந்தைகள்
மே 22, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 0.43% ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. இன்று மே 26, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 1.20 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.92 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.68 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசியா
இன்று மே 26, 2020, ஆசியாவில் எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக ஜப்பானின் நிக்கி இண்டெக்ஸ் 2.55 சதவிகிதம் ஏற்றத்தில் வர்த்தகமானது. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி தான் இருப்பதிலேயே குறைவாக 0.03 % ஏற்றத்தில் வர்த்தகமானது.
பங்கு விலை நிலவரம்
ஈஷர் மோட்டார்ஸ், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டைடன் கம்பெனி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்ரீ சிமெண்ட் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், டி சி எஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், சன் பார்மா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications