சென்செக்ஸ், கடந்த வாரத்தின் பெரும்பாலான நாட்களில் 36,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்து முதலீட்டாளர்களுக்கு குஷி கொடுத்தது.
ஆனால் இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளிலேயே சென்செக்ஸ் சுமார் 650 புள்ளிகள் சரிந்து எல்லோரையும் அலற விட்டு இருக்கிறது.
அடுத்து 37,000 புள்ளிகளை எப்போது தொடும் என ஏங்கிக் கொண்டு முதலீட்டாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்து இருக்கிறது. சரி இன்றைய சென்செக்ஸ் நிலவரத்தையும் பார்ப்போம், அதோடு இன்று விலை ஏற்றம் கண்ட மற்றும் விலை சரிந்து பங்குகள் விவரங்களையும் பார்ப்போம்.
சென்செக்ஸ்
நேற்று, சென்செக்ஸ், 36,693 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 36,517 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தக நேர முடிவில் 36,033 புள்ளிகளைத் தொட்டு 660 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. வார கணக்கில் கண்ட ஏற்றம், இன்று ஒரே நாளில் காணாமல் போய் இருக்கிறது. மீண்டும் 36,000 புள்ளிகளில் இருந்து சென்செக்ஸ் ஏற்றம் காண வேண்டும்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 03 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,805 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 831 பங்குகள் ஏற்றத்திலும், 1,854 பங்குகள் இறக்கத்திலும், 120 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. இந்த ரண களத்திலும், மும்பை பங்குச் சந்தையில் 103 பங்குகள் 52 வார விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
உலக பங்குச் சந்தைகள்
13 ஜூலை 2020 அன்று, அமெரிக்க நாஸ்டாக் பங்குச் சந்தை 2.13 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. 14 ஜூலை, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.41 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.75 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.54 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டு இருக்கிறது.
ரத்தக் களரியில் ஆசியச் சந்தைகள்
ஆசியாவில், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. அதிகபட்சமாக ஹாங்காங்கின் ஹேங் சேங் சந்தை 1.14 % இறக்கத்தில் வர்த்தகமானது. ஜப்பானின் நிக்கி 0.87 % இறக்கத்தில் வர்த்தகமானது. இது கூட இந்திய சந்தைகள் இறக்கம் காண முக்கிய காரணமாக இருக்கலாம்.
பங்கு விலை நிலவரம்
டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், டைடன் கம்பெனி, பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஜி எண்டர்டெயின்மெண்ட், ஈஷர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. கடந்த சில நாட்களாக பயங்கரமாக விலை அதிகரித்த ரிலையன்ஸ் கூட இன்று விலை சரிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


Click it and Unblock the Notifications