ஜான் ஏறி முழம் சறுக்கிய சென்செக்ஸ்! 708 புள்ளிகள் சரிவு!

"காசு காசா சம்பாதிச்சவன் நீ.. நோட்டா விட்றாதா" என ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள்.

அதாவது ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என சில்லறை காசுகளாக சேர்த்து சேர்த்து சம்பாதித்தவன் நீ. 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்களாக இழந்துவிடாதே என்பது தான் இதன் பொருள்.

அந்த பழமொழி இன்று சென்செக்ஸுக்கு நறுக்கெனப் பொருந்துகிறது. கடந்த ஆறு நாட்களாக 34,000 புள்ளிகளுக்கு மேலேயே இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த சென்செக்ஸ் இன்று 33,538 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. இன்று சென்செக்ஸ் முதல் உலக சந்தைகள் வரை அனைத்தின் நிலவரத்தையும் ஒரு ரவுண்ட் பார்ப்போம் வாங்க.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

நேற்று மாலை சென்செக்ஸ், 34,247 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 34,214 புள்ளிகளில், சிறிய கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் அதிகபட்சமாக 33,480 புள்ளிகள் வரைத் தொட்டு வர்த்தகமாகி இருக்கிறது. வர்த்தக நேர முடிவில் 33,538 புள்ளிகளைத் தொட்டு 708 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சென்செக்ஸ், தொடர்ந்து 6 நாட்கள் 34,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து விட்டு, இன்று 34,000 புள்ளிகளுக்குக் கீழ் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

மும்பை பங்குச் சந்தையின் பெஞ்ச் மார்க் இண்டெக்ஸான சென்செக்ஸின் 30 பங்குகளில் 05 பங்குகள் ஏற்றத்திலும், 25 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,705 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,018 பங்குகள் ஏற்றத்திலும், 1,533 பங்குகள் இறக்கத்திலும், 154 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

சென்செக்ஸ் சரமாரியாக சரிவை சந்தித்து இருக்கின்ற, இந்த வர்த்தக நாளில் கூட, மும்பை பங்குச் சந்தையில், 78 பங்குகள், தன் 52 வார கால உச்ச விலையைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருப்பது எல்லோரையும் கொஞ்சம் யோசிக்க வைத்து இருக்கிறது. ஆக சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் இல்லாத பங்குகள் நிறைய விலை ஏற்றம் கண்டு கொண்டிருப்பதையே இது உணர்த்துகிறது.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

ஜூன் 11, 2020 இன்று லண்டனின் எஃப் டி எஸ் இ 2.08 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.25 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.34 % இறக்கத்திலும், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் தடுமாற்றம், இந்திய சந்தைகளிலும் கொஞ்சம் பலமாகவே எதிரொலித்து இருக்கிறது. அதோடு ஆசிய சந்தைகள் எல்லாமே இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. இது சென்செக்ஸ் சரிவுக்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லலாம்.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

இண்டஸ் இண்ட் பேங்க், ஹீரோ மோட்டோ கார்ப், பவர் கிரிட் கார்ப்பரேஷன், மஹிந்திரா & மஹிந்திரா, நெஸ்ட்லே போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி இன்ஃப்ராடெல், ஜி எண்டர்டெயின்மெண்ட், எஸ்பிஐ, சன் பார்மா, வேதாந்தா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+