கொரோனா வைரஸால் மார்ச் 2020-ல் கண்ட சரிவுக்குப் பின், சென்செக்ஸ் மீண்டும் பழைய நிலைக்கு வர மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
கடந்த 30 ஏப்ரல் 2020 அன்று சென்செக்ஸ் 33,887 புள்ளிகளைத் தொட்டது. அதன் பின் இன்று வரை, 34,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாவதில் சென்செக்ஸ் தயக்கம் காட்டிக் கொண்டே இருக்கிறது. இதற்கு மத்தியில் கொரோனா இரண்டாம் அலை செய்திகள் வேறு சந்தையை மேலே ஏற விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறது.
சரி சென்செக்ஸின் நிலவரம் என்ன? கடந்த வெள்ளிக்கிழமை மற்ற நாட்டுச் சந்தைகள் என்ன ஆயின என்பதை எல்லாம் ஒரு ரவுண்ட் பார்ப்போம்.
சென்செக்ஸ்
கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ், 33,780 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 33,670 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 33,050 புள்ளிகளைத் தொட்டு 730 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் சென்செக்ஸ் 33,000 புள்ளிகளை தக்க வைத்துக் கொள்ளவே படாத பாடு படும் போலிருக்கிறதே.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 01 பங்கு மட்டுமே ஏற்றத்திலும், 29 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,402 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,057 பங்குகள் ஏற்றத்திலும், 1168 பங்குகள் இறக்கத்திலும், 177 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக பங்குச் சந்தைகள்
ஜூன் 12, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 1.01 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. ஜூன் 12, 2020 அன்று, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.47 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.49 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.18 % ஏற்றத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
ஆசியாவில் எல்லா பங்குச் சந்தைகளும் சரிவில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, கொரியாவின் கோஸ்பி பங்குச் சந்தை 2.55 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 0.06 % என குறைந்தபட்ச சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக இந்தியாவிலும் இந்த நெகட்டிவ் செண்டிமெண்ட் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.
பங்கு விலை நிலவரம்
ஜி எண்டர்டெயின்மெண்ட், மஹிந்திரா & மஹிந்திரா, விப்ரோ, பிரிட்டானியா ஹிண்டால்கோ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications