சென்செக்ஸ் மீது யார் கண் பட்டதோ என்னவோ தெரியவில்லை, தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருந்த சென்செக்ஸ் தற்போது சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நேற்று சென்செக்ஸ் 708 புள்ளிகள் சரிந்தது. அந்த ஷாக்கையே நம்மால் பெரிதாக தாங்க முடியவில்லை. இன்று காலையிலும் சென்செக்ஸ் மீண்டும் 750 புள்ளிகள் சரிந்து எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
சரி இன்று சென்செக்ஸில் நிலவரம் என்ன? சர்வதேச சந்தைகள் நேற்று எப்படி வர்த்தகமாயின? விலை ஏற்றம் காணும் பங்குகள் விவரங்கள் என ஒரு ரவுண்ட் பார்ப்போம் வாங்க.

சென்செக்ஸ்
நேற்று மாலை சென்செக்ஸ், 33.538 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 32,436 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் குறைந்தபட்ச புள்ளியாக 32,348 புள்ளிகள் வரைத் தொட்டடு. ஆனால் மீண்டும் ஓரளவுக்குத் தேறி தற்போது 32,788 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக, 750 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 03 பங்குகள் ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,157 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 456 பங்குகள் ஏற்றத்திலும், 1,615 பங்குகள் 86 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 32 பங்குகள் தங்களின் கடந்த 52 வார உச்ச விலையைத் தொட்டு இருக்கிறார்கள்.

உலக பங்குச் சந்தைகள்
ஜூன் 11, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 5.27 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. ஜூன் 11, 2020 அன்று, லண்டனின் எஃப் டி எஸ் இ 3.99 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 4.71 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 4.47 % இறக்கத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. ஆசியாவில் இதே ரத்தக் களரி தான். அது தான் சென்செக்ஸிலும் பலமாக பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறது.

பங்கு விலை நிலவரம்
பார்தி இன்ஃப்ராடெல், வேதாந்தா, டைடன் கம்பெனி, பார்தி ஏர்டெல், ஸ்ரீ சிமெண்ட்ஸ் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இண்டஸ் இண்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஓ என் ஜி சி, ஜி எண்டர்டெயின்மெண்ட், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.