கடந்த வாரத்தின் முதல் நான்கு நாட்களில் வீழ்ச்சி கண்டு வந்த சென்செக்ஸ், கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 835 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அதே போல நேற்றும் 592 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று 8 புள்ளிகள் இறக்கம் கண்டு, சென்செக்ஸ் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸ் இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், நிலவரம் என்ன? ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலவரம்
நேற்று மாலை 37,981 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 38,176 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 38,235 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ், நேற்றைய குளோசிங் புள்ளியை விட 8 புள்ளிகள் இறக்கம் கண்டு 37,973 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 10 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 20 பங்குகள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,790 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,478 பங்குகள் ஏற்றத்திலும், 172 பங்குகள் விலை இறக்கத்திலும், 120 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 120 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், அல்ட்ரா டெக் சிமெண்ட், டி சி எஸ், டாடா ஸ்டீல், ஹெச் டி எஃப் சி, போன்ற பங்குகள் எல்லாம் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ஓ என் ஜி சி, இண்டஸ் இண்ட் பேங்க், பவர் கிரிட், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச் சி எல் டெக் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (29 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.38 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.13 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.34 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றம் காண முடியாமல் திணரிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று (29 செப் 2020) ஆசிய சந்தைகளில், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், ஹாங்காங் நாட்டின் ஹேங் செங் தவிர, மற்ற சந்தைகள் எல்லாமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. தென் கொரியாவின் கோஸ்பி அதிகபட்சமாக 0.86 % ஏற்றத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications