நேற்று முதல், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான பிரச்சனைகளால், பல வீரர்கள் வீர மரணம் அடைந்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.
இந்த நேரத்தில், இன்று காலையிலேயே சென்செக்ஸ் என்ன ஆகுமோ என பதறிக் கொண்டிருந்த போது தான் கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.
இன்று பெரிதாக சரிவுகள் இருக்குமோ என்கிற அச்சம் முதலீட்டாளர்களுக்கு இருந்தாலும், பெரிதாக சந்தை இறக்கம் காணவில்லை. சென்செக்ஸின் அதிகபட்ச இறக்கப் புள்ளிகளே 273 புள்ளிகள் தான் என்பதால் முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் கொஞ்சம் நிம்மதி அடைந்து இருக்கிறார்கள். சரி இன்றைய சந்தை நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலை என்ன
நேற்று மாலை சென்செக்ஸ், 33,605 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 33,438 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் குறைந்தபட்ச புள்ளியாக 33,332 புள்ளிகள் வரைத் தொட்டது. ஆனால் மீண்டும் ஓரளவுக்கு ஏற்றம் கண்டு, 33,507 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் உடன் ஒப்பிட்டால் 97 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 14 பங்குகள் ஏற்றத்திலும், 16 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,720 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,410 பங்குகள் ஏற்றத்திலும், 1,154 பங்குகள் இறக்கத்திலும், 156 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 88 பங்குகள் தங்களின் கடந்த 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது.
உலக பங்குச் சந்தைகள்
ஜூன் 17, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 0.71 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.42 சதவிகிதமும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.83 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆசியாவில் ஜப்பானின் நிக்கி தவிர மற்ற எல்லா பக்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
மாருதி ச்சூகி, பார்தி ஏர்டெல், விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி இன்ஃப்ராடெல், கோட்டக் மஹிந்திரா, ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஐடிசி, பவர் கிரிட் கார்பப்ரேஷன் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications