சென்செக்ஸுக்கு என்ன ஜுரம் பிடித்ததோ தெரியவில்லை, கடந்த 14 வர்த்தக நாட்களில் பெரும்பாலான நாட்கள் சரிந்து கொண்டே இருக்கிறது.
இந்த சரிவு கடந்த பிப்ரவரி 13, 2020 அன்று 41,709 என்கிற உச்சப் புள்ளியில் இருந்து தொடங்கியது.
இன்று மதியம் சுமார் 1.35 மணி அளவில், சென்செக்ஸ் தன் குறைந்தபட்ச புள்ளியாக 38,005 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
மொத்த சரிவு
ஆக 41,709 புள்ளிகளில் இருந்து சென்செக்ஸ் சுமாராக 38,005 புள்ளிகள் வரை சரிந்து இருக்கிறது என்றால், மொத்தம் 3,704 புள்ளிகள் சரிந்து இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. போகிற போக்கைப் பார்த்தால் 38,000 என்கிற வலுவான சப்போர்ட் புள்ளிகள் கூட உடைபடும் என்கிற பதற்றம் பரவத் தொடங்கி இருக்கிறது.
சரிவு
நேற்று மாலை சென்செக்ஸ் 38,623 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,715 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ். இன்றைக்கு குறைந்தபட்சமாக 38,005 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிறது. இப்போது சுமாராக 38,145 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக சுமார் 478 புள்ளிகள் சரிவில் இருக்கிறது சென்செக்ஸ்.
நிஃப்டி நிலவரம்
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி நேற்று மாலை, 11,303 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 11,351 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. இன்றைக்கு குறைந்தபட்சமாக 11,115 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக சுமார் 190 புள்ளிகள் சரிவில் இருக்கிறது நிஃப்டி.
30 பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 07 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,352 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 511 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 1,686 பங்குகள் இறக்கத்திலும், 128 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
52 வார உச்சம்
மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் ஒட்டு மொத்த 2,352 பங்குகளில், 22 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 298 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பங்குகள் நிலவரம்
சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், ஏஷியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க், ஈஷர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், எஸ் பி ஐ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications