பங்குச் சந்தைகளில் மரண அடி, சென்செக்ஸ் 3,900 புள்ளிகள் வீழ்ச்சி.. 1 நொடியில் ரூ.19 லட்சம் கோடி அவுட்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விளைவால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் என்ற அச்சம், பொருளாதார மந்தநிலைக்கு இட்டு செல்லும் என்ற பயம் போன்ற காரணங்களால் தொடர்ந்து 2வது நாளாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அதன் தாக்கம் திங்கட்கிழமையன்று (இன்று) இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டாடா மோட்டார்ஸின் ஜேஎல்ஆர் நிறுவனம் தனது சொகுசு கார்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தியது.

மேலும், அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்தது. இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிப்பதற்கான சா்த்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததால் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இன்று பலத்த அடிவாங்கியது. ஆசிய சந்தைகளில் சீனா மற்றும் ஜப்பான் பங்குச் சந்தைகள் அதாள பாதாளத்தில் வீழ்ந்தன. இந்திய பங்குச் சந்தைகளில் தப்பவில்லை. இந்திய பங்குச் சந்தைளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் பலத்த சரிவுடன் தொடங்கியது. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 3,864.75 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது.

சென்செக்ஸ் 3,900 புள்ளிகள் வீழ்ச்சி, ரூ.19 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..!

மும்பை பங்குச் சந்தையில் பட்டிலியடப்பட்ட நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.19.4 லட்சம் கோடி சரிந்து ரூ.383.95 லட்சம் கோடியாக வீழ்ந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளின் விலையும் சரிந்தது. அதிகபட்சமாக டாடா ஸ்டீல் பங்கின் விலை 8 சதவீதத்துக்கு மேல் குறைந்தது. டிரம்பின் பரஸ்பர வரி விளைவால் பங்குச் சந்தைகள் மட்டுமல்ல கச்சா எண்ணெய் சந்தையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் 1 பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.12 டாலர் குறைந்து 63.46 டாலராக சரிவடைந்துள்ளது. அதேவேளையில், அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 2.05 டாலர் குறைந்து 59.94 டாலராக சரிவடைந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளும் குறைந்தபட்சம் 10 சதவீதம் விதித்தார் மேலும், அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சுமார் 60 நாடு்கள் மீது கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்தார். குறிப்பாக சீனா பொருட்களுக்கு 54 சதவீதம் வரி விதித்தார். டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் வர்த்தக போருக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதி செய்வது போல், டிரம்ப் வரி விதித்த அடுத்த 48 மணி நேரத்துக்குள் சீனா பதிலடி கொடுத்தது. இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு சீனா 34 சதவீதம் வரி விதித்தது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+