நேற்று மாலை, சென்செக்ஸ் 38,365 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,988 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 37,980 புள்ளிகள் வரை சரிவைக் கண்டது.
அதன் பின், ஓரளவுக்கு ஏற்றம் கண்டு, 38,252 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சரி இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன? எந்த பங்குகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? ஆசிய பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

சென்செக்ஸ் 30-ல் பங்கு விலை நிலவரம்
ஏஷியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, ரிலையன்ஸ், நெஸ்ட்லே, ல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஓ என் ஜி சி, எஸ் பி ஐ, பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 07 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,493 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 520 பங்குகள் ஏற்றத்திலும், 1,843 பங்குகள் விலை இறக்கத்திலும், 130 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 72 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
இண்டெக்ஸ்
இன்று, பார்மா தவிர, மற்ற எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக தனியார் வங்கி, பொதுத் துறை வங்கி, நிதி சேவைகள், மெட்டல், ரியாலிட்டி போன்ற செக்டார்கள் 1.5 சதவிகிதத்துக்கு மேல், இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த செக்டார்கள், சென்செக்ஸின் இறக்கத்துக்கும் முக்கிய காரணமாக இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (9 செப்டம்பர் 2020), ஆசியாவில், எல்லா பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஜப்பானின் நிக்கி, இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் போன்ற பங்குச் சந்தைகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications