அதள பாதாளத்துக்கு சென்ற சென்செக்ஸ்! வரலாறு காணாத வீழ்ச்சி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே நாளில் சென்செக்ஸ் 3,200 புள்ளிகள் இறக்கம் காண்பது எல்லாம் அரிதிலும் அரிது. அந்த சம்பவத்தைத் தான் இன்று இப்போது நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 35,697 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 34,472 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. இன்றைக்கு குறைந்தபட்சமாக 32,493 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது.

கொஞ்சம் தேறி, தற்போது 32,750 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக இன்றைய குறைந்தபட்ச புள்ளியை வைத்து சரிவை கணக்கிட்டால் இது 3,200 புள்ளிகள் சரிந்து இருக்கிறது சென்செக்ஸ். இன்று காலை முதலே சென்செக்ஸ் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

2020-ல்

2020-ல்

இந்த 2020-ம் ஆண்டு, ஜனவரி 20-ம் தேதி சென்செக்ஸ் தன் உச்ச புள்ளியான 42,273 புள்ளிகளைத் தொட்டது. அதன் பிறகு இன்றைய குறைந்தபட்ச புள்ளியான 32,493 புள்ளிகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலிந்த 2020-ம் ஆண்டில் மட்டும் 9,780 புள்ளிகள் சரிந்து இருக்கிறது என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.

நிஃப்டி

நிஃப்டி

அதே போல, நேற்று மாலை நிஃப்டி 10,458 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 10,039 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 9,540 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நிஃப்டி தற்போது சுமாராக 917 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

 30 பங்குகள்
 

30 பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் ஒரு பங்கு கூட ஏற்றத்தில் வர்த்தகமாகவில்லை. 30 பங்குகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,519 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 184 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 2,233 பங்குகள் இறக்கத்திலும், 102 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன.

 52 வார ஏற்ற இறக்கம்

52 வார ஏற்ற இறக்கம்

மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் மொத்த 2,519 பங்குகளில், 13 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 1,155 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாகி வருகின்றன.

 பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

சொல்லிக் கொள்ளும் விதத்தில் ஒரு பெரிய நிறுவன பங்கு கூட ஏற்றத்தில் வர்த்தகமாக வில்லை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், யூ பி எல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யெஸ் பேங்க், ஹிண்டால்கோ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex drop around 3200 points as on 12th March 2020

The bomaby stockexchange sensex has dropped around 3200 points. From yesterday close to today low the differene is around 3,204 points are there.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X