இன்போசிஸ் காலாண்டு அறிக்கை வெளியீட்டை அடுத்து சென்செக்ஸ் 182 புள்ளிகள் சரிவு..!
முன்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 182 புள்ளிகள் சரிவுடனும், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 9,200 புள்ளிகளுடனும் இன்று வர்த்தகம் செய்யப்பட்டன. இதற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 4வது காலாண்டு அறிவிப்பும் ஒரு காரணமாக்கும்.
பிஎஸ்ஈ/என்எஸ்ஈ
இந்திய பங்குச் சந்தை குறியீடான பிஎஸ்ஈ 182.03 புள்ளிகள் அதாவது 0.61 சதவீதம் சரிந்து 29,461.45 புள்ளிகளாக இன்று வர்த்தகம் ஆணது.
இந்த ஒரு வாரத்தில் மட்டும் மும்பை பங்குச் சந்தையின் குறியீடு 0.82 சதவீதம் சரிந்தது. சென்ற ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி குறைந்ததை அடுத்து இதுவே அதிகப்படியான சரிவாகும்.
தேசிய பங்குச் சந்தை குறியீடான என்எஸ்ஈ 62.65 புள்ளிகள் அதாவது 0.57 சதவீதம் சரிந்து 9,150.80 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
விலை சரிந்த துறை பங்குகள்
இன்றைய பங்குச் சந்தையில் உலோக நிறுவனங்களின் பங்குகள் 2.84 சதவீதமும், ஐடி நிறுவனப் பங்குகள் 2.73 சதவீதமும், டெக் நிறுவனப் பங்குகள் 2.62 சதவீதமும், மூலதன பொருட்கள் நிறுவனங்கள் 0.97 சதவீதமும் சரிந்தன.
விலை உயர்ந்து துறை பங்குகள்
அதே நேரம் மறுபக்கம் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனப் பங்குகள் 1.4 சதவீதமும், ரியாலிட்டி நிறுவனப் பங்குகள் 0.92 சதவீதமும், ஹெல்த்கேர் நிறுவனப் பங்குகள் 0.64 சதவீதமும் உயர்ந்தன.
இன்போசிஸ்
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய நிறுவனமான இன்போசிஸ் 2017--2018 நிதி ஆண்டில் 6.5 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயரத் திட்டம் போட்டுள்ளது, பங்கு தார்களுக்கு 2 பில்லியன் டாலர்கள் லாபம் அளிக்கின்றது.
இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் இன்று 4 வது காலாண்டு அறிவிப்பில் எதிர்பார்த்த வருவாய் இல்லை என்று அறிவித்த பிறகு 3.87 சதவீதம் விலை குறைந்து 931.40 ரூபாயாக வர்த்தகம் ஆனது.
இன்றை நட்டம் அடைந்த ஐந்து பங்குகள்
இன்ஃபோசிஸ் (-3.86%), பார்தி ஏர்டெல் (-3.03%), டாடா ஸ்டீல் (-2.92%), டிசிஎஸ் (-2.77%), டாடா மோட்டார்ஸ் (-2.63%) ஆகிய பங்குகள் இன்று அதிக நட்டம் அடைந்தவையாகும்.
இன்றைய டாப் 5 பங்குகள்
சன் பார்மா (+ 1.39%), பவர் கிரிட் (+ 0.94%), ரிலையன்ஸ் (+ 0.75%), ஐசிஐசிஐ வங்கி (+ 0.39%) மற்றும் எச்யூஎல் (+ 0.38%) ஆகிய பங்குகள் இன்றைய டாப் ஐந்து நிறுவனங்களின் பங்குகளாகும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications