மத்திய அரசு கடந்த சனிக்கிழமையன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் நடுத்தர மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. மேலும், நிபுணர்களும் பட்ஜெட் குறித்து பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைக்கவில்லை. இதனால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக ஆனது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கிய 5 நிமிடத்திலேயே குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்தது. பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள் பங்குச் சந்தை பலத்த அடி வாங்கியது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 442 புள்ளிகள் சரிந்து 77,063.94 புள்ளிகளில் தொடங்கியது. மேலும் அடுத்த சில நிமிடங்களில் 76,756.09 புள்ளிகளுக்கு சென்றது.
மிட் மற்றும் ஸ்மால்கேப் பிரிவுகளை சேர்ந்த பங்குகள் கடுமையாக சரிந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் இன்டெக்ஸ் தலா 1 சதவீதத்துக்கு மேல் குறைந்தது. ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.424 லட்சம் கோடியிலிருந்து ரூ.419 லட்சம் கோடியாக சரிந்தது.
சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாதது, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவு போன்றவற்றால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீது பொருட்கள் மீது வரி விதித்தார்.
சீன பொருட்களுக்கு 10 சதவீதமும், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும் வரி விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். டிரம்பின் இந்த நடவடிக்கை பெரிய வரி விதிப்பு போரை ஏற்படுத்தும் என்ற அச்சமும், இதன் தாக்கம் உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது. கொரிய மற்றும் ஜப்பான் பங்குச் சந்தைகள் தலா 3 சதவீதம் சரிவு கண்டன.
டாலரின் மதிப்பு உயர்ந்ததால், இந்திய ரூபாயின் வெளிமதிப்பு இன்று இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.87ஐ தாண்டி வீழ்ச்சி கண்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் கூட்டம் இந்த வாரம் நடைபெற உள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு எச்சரிக்கை உணர்வு ஏற்படுத்தியது. இது போன்ற காரணங்களால் பங்குச் சந்தை சரிவு ஏற்பட்டது.
இருப்பினும் தற்போது பங்குச் சந்தை சரிவு தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போது சென்செக்ஸ் முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் சுமார் 300 புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளது. பங்குச் சந்தை சரிவு குறித்து ஜியோஜித் நிதி சேவைகளின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் விகே விஜயகுமார் கூறுகையில், மத்திய பட்ஜெட் சிறந்ததாக இருந்தபோதிலும், டிரம்பின் வரிகள் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையை தூண்டி விட்டதால் சந்தை அழுத்தத்திற்கு உள்ளானது என்று தெரிவித்தார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications