2020ஆம் ஆண்டு சரிவிலிருந்து முழுமையாக சென்செக்ஸ் மீண்டது.. இனி ராஜயோகம் தான்..!

கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டதைப் போல் மும்பை பங்குச்சந்தையும் பாதித்தது. இந்நிலையில் கொரோனா காட்டுப்பாடுகளில் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் நாட்டின் தொழிற்துறை மற்றும் சேவைத் துறை சரிவில் இருந்து மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.

இதேவேளையில் சென்செக்ஸ் குறியீடு 2020ஆம் ஆண்டில் எதிர்கொண்ட சரிவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தினால் நாட்டின் பங்குச்சந்தையும் பொருளாதாரமும் எவ்விதமான பாதிப்பும் அடையாது.

ஆனால் வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதேபோல் பிரிட்டன் மீண்டும் ரெசிஷனுக்குச் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்தியா மக்களும், முதலீட்டாளர்களும் உஷாராக இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

30 பங்குகள்

30 பங்குகள்

மும்பை பங்குச்சந்தையில் 30 நிறுவனங்கள் கொண்ட குறியீடு 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட மொத்த சரிவில் இருந்து மீண்டு இன்றைய வர்த்தகத்திலும் குறியீடு லாபமான சூழ்நிலையில் உள்ளது.

இதேபோல் நிப்டி குறியீடும் சிறப்பான வளர்ச்சியை அடைந்து 2020ல் ஏற்பட்ட மொத்த சரிவில் இருந்து மீண்டுள்ளது.

 

முக்கியத் துறை

முக்கியத் துறை

இந்திய சந்தையில் பார்மா மற்றும் ஐடி துறையில் ஏற்பட்ட வளர்ச்சி தான் சென்செக்ஸ் குறியீடு எதிர்கொண்ட சரிவில் இருந்து மீண்டு வர முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

பார்மா

பார்மா

கொரோனா காரணமாக இந்தியாவில் பார்மா நிறுவனங்களின் வர்த்தகம் அதிகரித்தது. இதனால் முதலீட்டாளர்களும் முதலீட்டைப் பாதுகாக்க பார்மா துறையில் அதிகளவில் முதலீடு செய்தனர்.

2020ல் மட்டும் பார்மா துறை குறியீடு சுமார் 44.47 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

 

ஐடி துறை

ஐடி துறை

ஐடி துறை இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் இருந்து சிறிதும் பெரிதுமாகப் பல பிராஜெக்ட் கிடைத்த காரணமாக இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் இந்த லாக்டவுன் காலத்தில் அதிகரித்தது.

இதேபோல் ஐடி துறை குறியீடு இந்த ஆண்டு 36.74 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.

 

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் சுமார் 746 புள்ளிகள் வரையில் உயர்ந்து அதிகப்படியாக 41,370.91 புள்ளிகளை அடைந்தது. ஆனால் வர்த்தக முடிவில் கணிசமான சரிவு ஏற்பட்டுச் சென்செக்ஸ் 724,02 புள்ளிகள் உயர்வுடன் 41,340.16 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.

இதேபோல் நிஃப்டி குறியீடு 211 புள்ளிகள் உயர்ந்து 12,120.30 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய பங்குச்சந்தை உயர்வுக்கு முக்கியக் காரணங்களைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

 

புதிய உச்சம்

புதிய உச்சம்

இந்தியச் சந்தையில் வர்த்தகம் அடுத்த சில நாட்களுக்குச் சிறப்பாக இருந்தால் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு வரலாற்று உச்சத்தை அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது

தற்போது சென்செக்ஸ் 42,273 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தை ஜனவரி 20ஆம் தேதி அடைந்தது. இதேபோல் நிப்டி 12,430 புள்ளிகள் தான் வரலாற்று உச்சமாக உள்ளது.

 

மார்ச்

மார்ச்

கொரோனா தொற்றுக் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது பல வருட சரிவிற்குச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+