சென்செக்ஸ் கடந்த 24 ஆகஸ்ட் 2020 அன்று 38,799 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து. இது மார்ச் 2020 சரிவுக்குப் பின், சென்செக்ஸ் நிறைவடைந்த புதிய உச்சம். இப்படி கடந்த வாரம் முழுக்கவே தினமும், புதிய உச்சத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது சென்செக்ஸ். கடந்த வாரத்தில் கடந்த ஏற்றத்தை எல்லாம், இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே பறி கொடுத்துவிட்டது சென்செக்ஸ்.

இன்று காலை அதிகபட்சமாக 40,010 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமான சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் 38,628 புள்ளிகளில் நிறைவடைந்தது. ஆக இன்றைய உச்சப் புள்ளியில் இருந்து 1,382 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது சென்செக்ஸ்.
இந்திய பொருளாதாரம் இதுவரை காணாத அளவுக்கு, ஜிடிபி சரியப் போகிறது என்கிற நெகட்டிவ் செண்டிமெண்டால், சந்தை செமத்தியாக சரிந்து இருக்கிறது.
இந்தியாவில், 1996-ம் ஆண்டில் இருந்து தான், ஒவ்வொரு காலாண்டுக்கும் ஜிடிபி தரவுகளை வெளியிடத் தொடங்கினார்களாம். அன்றில் இருந்து இன்று வரை, இந்திய பொருளாதாரம் எந்த காலாண்டிலும் சரிவை (Contraction) கண்டதில்லையாம். இந்த ஜூன் 2020 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி காணாமல், முதன் முறையாக சரிவைக் காணப் போகிறதாம்.
காலையில் சிறப்பாக வர்த்தகமாகிக் கொண்டிருந்த சென்செக்ஸ் 30 பங்குகள், வர்த்தக நேர முடிவில் பெரிய சரிவைக் கண்டு இருக்கின்றன. சென்செக்ஸின் 30 பங்குகளில் ஓ என் ஜி சி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தவிர மற்ற எல்லா பங்குகளும் இறக்கத்தில் நிறைவடைந்து இருக்கின்றன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 3,015 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 536 பங்குகள் மட்டுமே விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. 2,329 பங்குகள் விலை இறக்கத்திலும், 150 பங்குகள் விலை மாற்றமின்றியுமே வர்த்தகமாகி இருக்கின்றன.
துறை வாரியாக இண்டெக்ஸைப் பார்த்தாலும், எல்லா இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. மீடியா, பொதுத் துறை வங்கிகள், ரியாலிட்டி, பார்மா போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் 4 சதவிகிதத்துக்கு மேல் இறக்கம் கண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகளில் சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஜப்பானின் நிக்கி தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications