32,000 புள்ளிகளில் மல்லுகட்டும் சென்செக்ஸ்! சந்தை நிலவரம் என்ன?

நீண்ட நாட்களுக்குப் பிறகு, சரியாக சொல்ல வேண்டும் என்றால் 13 மே 2020-க்குப் பிறகு சென்செக்ஸ் மீண்டும் தன் 32,000 புள்ளிகளை எட்டிப் பிடித்து இருக்கிறது.

32,000 புள்ளிகளில் மல்லுகட்டும் சென்செக்ஸ்! சந்தை நிலவரம் என்ன?

இந்த ஏற்றத்தை, இன்றும் சென்செக்ஸ் தக்க வைத்துக் கொள்ளுமா? என்கிற கேள்வி எழும் அளவுக்கு சென்செக்ஸ் 32,000 புள்ளிகளில் மல்லுகட்டிக் கொண்டு இருக்கிறது. சரி இன்றைய சென்செக்ஸ் & உலக சந்தைகள் கள நிலவரத்தைப் பார்ப்போம்.

சென்செக்ஸ் நிலவரம்

நேற்று மாலை சென்செக்ஸ், 32,200 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 32,041 புள்ளிகளில் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸின் குறைந்தபட்ச புள்ளியாக 31,823 புள்ளிகள் வரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக, 377 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 14 பங்குகள் ஏற்றத்திலும், 16 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,768 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,044 பங்குகள் ஏற்றத்திலும், 622 பங்குகள் இறக்கத்திலும், 102 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக பங்குச் சந்தைகள்

மே 28, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 0.46 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. மே 28, 2020 அன்று, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.21 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.76 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.06 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. ஆனால் ஆசியாவில் கதையே வேறாக இருக்கிறது.

ஆசியா

ஆசியாவில் இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் மற்றும் சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற நாட்டுச் சந்தைகள் எல்லாம் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஹாங்காங்கின் ஹேங்செங் சந்தை 0.71 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் சென்செக்ஸ் 32,000 புள்ளிகளில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது.

பங்கு விலை நிலவரம்

பார்தி இன்ஃப்ராடெல், பஜாஜ் ஆட்டோ, விப்ரோ, ஐடிசி, சிப்லா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், கோட்டக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

டாலர் & கச்சா எண்ணெய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 75.65 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்னெய் விலை சுமாராக 35 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+