சென்செக்ஸ், தன் வர்த்தக நேர முடிவில் சுமாராக 3,934 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
இது கடந்த கால சென்செக்ஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஒரு நாள் வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 20, 2020 அன்று சென்செக்ஸ் தன் வாழ்நாள் உச்சப் புள்ளியான 42,273 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்று சுமாராக 16,290 புள்ளிகள் சரிந்து 25,981 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
வரலாற்று சரிவு
சென்செக்ஸ் ஒரே நாளில் 1,000 புள்ளிகள் சரிவது எல்லாம் இந்த சில வாரங்களில் சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் சென்செக்ஸ் ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து கொண்டே இருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது. கடந்த மார்ச் 12, 2020 அன்று தான் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,919 புள்ளிகள் சரிந்து வரலாறு காணாத ஒரு நாள் வீழ்ச்சி என அதிர்ச்சி கொடுத்தது.
10 நாளில் இரண்டாவது முறை
இன்று மீண்டும் சென்செக்ஸ், வரலாறு காணாத அளவுக்கு, ஒரே நாளில் 3,934 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வயிற்றில் தீ கொளுத்தி இருக்கிறது. இப்படி தொடர்ந்து சரிந்து கொண்டே போனால், உலகின் பங்குச் சந்தைகள் மீதே முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடும்.
பங்குகள் நிலை
சென்செக்ஸின் 30 பங்குகள் மிகக் குறைந்த அளவே சைவு கண்ட பங்கு என்றால் அது பவர் கிரிட் கார்ப்பரேஷன் மட்டுமே. இதுவே 2.2 % விலை சரிந்து இருக்கிறது. ஆக்ஸிஸ் பேங்க் எல்லாம் ஒரே நாளில் சுமாராக 28 சதவிகிதம் சரிந்து எல்லோரையும் அதிர்ச்சியில் உறைய வைத்து இருக்கிறது. 30-க்கு 30 பங்குகளும் 2.2 - 28.01 % விலை சரிவில் தான் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.
பகீர் கிளப்பும் உலக சந்தைகள்
இன்று மார்ச் 23, 2020 வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் லண்டனின் எஃப் டி எஸ் இ 3.67 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிரான்சின் சி ஏசி 2.44, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 2.92 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
ரத்தம் தெறிக்க தெறிக்க என்பார்களே அது இது தான். ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மற்ற சந்தைகள் சுமாராக 3.11- 14 % வரை சரிந்து கொண்டே இருக்கின்றன. ஒரே நாளில் பங்குச் சந்தைகள் 14 % எல்லாம் சரியும் என்பதை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது இந்த கொரோனா பீதி.
டாலர்
மேலே சொன்னவைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ரூபாயைத் தாண்டி எங்கோ சென்று கொண்டு இருக்கிறது. இந்த டாலர் மதிப்பு அதிகரிப்பால், இந்திய ரூபாய் பலவீனமடைந்து, ஆபரணத் தங்கத்தின் விலையை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
சரிவின் தலைவன்
இன்று இந்திய பங்குச் சந்தைகளின் சரிவை முன்னெடுத்த துறைகள் என்றால் அது நிதித் துறைகள் தான். நிஃப்டி வங்கி, நிஃப்டி நிதி சேவைகள், நிஃப்டி பொதுத் துறை வங்கி, நிஃப்டி தனியார் வங்கிகள் எல்லாம் சுமார் 9.9 % - 14.6 % வரை சரிந்து, சந்தை சரிவை ஆழப்படுத்தின.
10 லட்சம் கோடி காலி
இன்று காலை இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது, முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சந்தை மதிப்பு இருந்ததை விட, வர்த்தகம் நிறைவடையும் போது சுமாராக 10 லட்சம் கோடி ரூபாயாவது காணாமல் போய் இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications