கடந்த வெள்ளிக்கிழமை மாலை, சென்செக்ஸ் 38,845 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,812 புள்ளிகளில் மெல்லிய கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கியது. அதன் பின் உச்சபட்சமாக 38,990 புள்ளிகள் வரைத் தொட்டது.
அதன் பின், 785 புள்ளிகள் சரிந்து 38,060 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகள் 3 பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக பங்குச் சந்தைகளின் நிலை என்ன? உலக பங்குச் சந்தைகள் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 03 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,881 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 595 பங்குகள் ஏற்றத்திலும், 2,113 பங்குகள் விலை இறக்கத்திலும், 173 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 135 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
இண்டெக்ஸ்
இன்று எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக ஆட்டோமொபைல், மீடியா, மெட்டல், பார்மா, பொதுத் துறை வங்கி, ரியாலிட்டி போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் 3.5 சதவிகிதத்துக்கு மேல் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக பார்மா & ரியாலிட்டி ஐந்து சதவிகிதத்துக்கு மேல் இறக்கம் கண்டு இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (21 செப்டம்பர் 2020) ஆசியாவில், எல்லா முக்கிய நாட்டுப் பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஹாங்காங் நாட்டின் ஹேங் செங் போன்ற சந்தைகள், அதிகபட்சமாக இரண்டு சதவிகிதத்துக்கு மேல் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (21 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 3.15 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.78 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.87 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 1.07 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications