நயாகரா அருவி போல் விழுந்த சென்செக்ஸ்! 2020-ல் மட்டும் 13,660 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தைகள் என்றாலே, நம் மக்கள் அதிகம் பயப்படுவார்கள். இப்போது மேற்கொண்டு அடி மேல் அடி விழுந்து கொண்டு தான் இருக்கிறது.

இதனால் கொஞ்ச நஞ்ச முதலீட்டாளர்கள் கூட பங்குச் சந்தையை பார்த்தாலே இப்போது தெறித்து ஓடத் தொடங்கி இருக்கிறார்கள்.

இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் சுமாராக 1,709 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

வரலாற்று சரிவு

வரலாற்று சரிவு

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சென்செக்ஸ், இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளியாக 28,613 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. ஏற்கனவே ஒவ்வொரு நாளும் 1,000 புள்ளிகள், 2,000 புள்ளிகள் சரிந்து கொண்டு இருக்கும் சென்செக்ஸ் இப்போது கடந்த 3 வருடங்களில் இல்லாத பெரிய சரிவைக் கண்டு இருக்கிறது என்பது மேலும் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது.

சென்செக்ஸ் சரிவு

சென்செக்ஸ் சரிவு

நேற்று மாலை சென்செக்ஸ் 30,579 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 30,968 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் தன் குறைந்தபட்சமாக 28,613 புள்ளிகளைத் தொட்டது. இன்றைக்கான வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 28,869 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 1,709 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்து இருக்கிறது.

நிஃப்டி

நிஃப்டி

நேற்று மாலை நிஃப்டி 8,967 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 9,088 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 8,468 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 498 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. இப்படி இரண்டு பங்குச் சந்தை இண்டெக்ஸ்களும் ஒரு சராசரி வர்த்தக நாளைப் போல இல்லாமல் நிறையவே சரிந்து இருக்கின்றன.

30 பங்குகள்

30 பங்குகள்

சென்செக்ஸில் 30 பங்குகளில், 02 பங்குகள் ஏற்றத்திலும், 28 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,532 பங்குகள் வர்த்தகமாயின. 386 பங்குகள் ஏற்றத்திலும், 1,996 பங்குகள் இறக்கத்திலும், 150 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,532 பங்குகளில் 13 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 834 பங்குகளின் விலை 52 வார இறக்கத்தையும் தொட்டு வர்த்தகமாயின.

பங்குகள் நிலவரம்

பங்குகள் நிலவரம்

ஜி எண்டர்டெயின்மெண்ட், ஓ என் ஜி சி, யெஸ் பேங்க், ஐடிசி, எஸ் பி ஐ போன்ற பங்குகள் விலை ஏற்றம் கண்டன. இண்டஸ் இண்ட் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், கோட்டக் மஹிந்திரா பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட் கார்பப்ரேஷன் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள் எல்லாம் சுமார் 5.01 - 5.75 சதவிகிதம் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசிய சந்தைகளில் தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் தவிர மற்ற எல்லா சந்தைகளும் 1.18 - 5.65 % வரை சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+