புதிய சாதனை படைத்த சென்செக்ஸ்! ஒரே நாளில் 2,900 புள்ளிகள் சரிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகமே பொருளாதார பிரச்சனைகளில் சிக்கினாலும், இந்தியா மட்டும் அதிகம் அடி வாங்காத காலம் எல்லாம் உண்டு.

ஆனால், இன்று இந்தியா அப்படிப்பட்ட ஒரு நிலையில் இல்லை. உலக அரங்கில் என்ன நடந்தாலும் அடி பலமாக விழுகிறது.

இன்று இந்திய சென்செக்ஸுக்கு அப்படி ஒரு மரண அடி விழுந்து இருக்கிறது என்றால் அது மிகை இல்லை.

 சுயமதிப்பீடு செய்து நிலுவையை கட்ட சொன்னீங்க.. எங்கள் கணக்குபடி ரூ13,000 கோடி.. அதை செலுத்தியாச்சு! சுயமதிப்பீடு செய்து நிலுவையை கட்ட சொன்னீங்க.. எங்கள் கணக்குபடி ரூ13,000 கோடி.. அதை செலுத்தியாச்சு!

சென்செக்ஸ் சரிவு

சென்செக்ஸ் சரிவு

கடந்த ஜனவரி 20, 2020 அன்று 42,273 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ், இன்று சுமாராக 32,778 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. ஆக கடந்த சில மாதங்களிலேயே சென்செக்ஸ் சுமாராக 9,450 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. சுமாராக 53 நாட்களில் இந்த வீழ்ச்சி என்றால் பரவாயில்லை என்கிறீர்களா..?

நிஃப்டி

நிஃப்டி

நிஃப்டியிலும் இதே கதை தான். கிட்டத் தட்ட வரலாறு காணாத விலை வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது நிஃப்டி. ஒரே நாளில் சுமாராக 490 புள்ளிகள் சரிவைக் கண்டது தான் நிஃப்டி வரலாற்றிலேயே அதிகமான சரிவு. ஆனால் இன்று அதர்கு எல்லாம் அப்பாற்பட்டு நிஃப்டி சுமாராக 850 புள்ளிகள் சரிந்து புதிய சாதனை படைத்து இருக்கிறது.

நிஃப்டி

நிஃப்டி

நிஃப்டியிலும் இதே கதை தான். கிட்டத் தட்ட வரலாறு காணாத விலை வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது நிஃப்டி. ஒரே நாளில் சுமாராக 490 புள்ளிகள் சரிவைக் கண்டது தான் நிஃப்டி வரலாற்றிலேயே அதிகமான சரிவு. ஆனால் இன்று அதர்கு எல்லாம் அப்பாற்பட்டு நிஃப்டி சுமாராக 850 புள்ளிகள் சரிந்து புதிய சாதனை படைத்து இருக்கிறது.

இண்டெக்ஸ்கள்

இண்டெக்ஸ்கள்

நிஃப்டி துறை சார் இண்டெக்ஸ்களில் மீடியா 10 %, பொதுத் துறை வங்கி 13.16 %, தனியார் வங்கி 9.04 %, ரியாலிட்டி 9.7 % என எல்லா துறைகளும் மரண அடி வாங்கி இருக்கின்றன. மிகக் குறைந்த அளவே சரிவைக் கண்ட இண்டெக்ஸ் என்றால் அது எஃப் எம் சி ஜி துறை தான். வெறும் 7.11 % தான் சரிந்து இருக்கிறது.

பங்கு விவரம்

பங்கு விவரம்

இன்று மும்பை பங்குச் சந்தையில் 2,573 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 225 பங்குகள் மட்டுமே விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. 2,242 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. 106 பங்குகள் விலை மாற்றமின்றி வர்த்தகமாயின. இதில் வெறும் 13 பங்குகள் மட்டுமே தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானது. 1,180 பங்குகள் 52 வார இறக்க விலையைத் தொட்டு இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex fall around 2,900 points and closed at 32778

Sensex has fallen around 2,900 points today and it closed around 32,778. It is sensex's historical low in a day.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X