சென்செக்ஸ் மீண்டும் சரிவு மோடுக்குப் போய் இருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ், தற்போது 1,500 புள்ளிகள் சரிந்து எல்லோரையும் கலக்கமடையச் செய்து இருக்கிறது. ஏற்கனவே மே 01 அன்று பல நாட்டு பங்குச் சந்தைகள் ஏற்றம் காண முடியாமல் தடுமாறியது குறிப்பிடத்தக்கது.
சரி இன்று சென்செக்ஸ் நிலவரம் என்ன..? எந்த முக்கிய பங்குகள் எல்லாம் ஏற்றத்திலும் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
உலக பங்குச் சந்தைகளில் என்ன நிலவரம்..? வாருங்கள் ஒரு ரவுண்ட் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலவரம்
ஏப்ரல் 30,2020 மாலை சென்செக்ஸ், 33,717 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 32,748 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸின் இன்றைய அதிகபட்ச புள்ளியாக 32,748-ஐத் தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்ச புள்ளியாக 32,122 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. தற்போது 1,530 புள்ளிகள் இறக்கத்தில் 32,186 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 01 பங்கு மட்டுமே ஏற்றத்திலும், 29 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,806 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 356 பங்குகள் ஏற்றத்திலும், 1,341 பங்குகள் இறக்கத்திலும், 82 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக பங்குச் சந்தைகள்
மே 01, 2020 அன்று அமெரிக்காவின் நாஸ்டாக் மீண்டும் 3.20 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 2.34 % இறக்கத்தில் வர்த்தகமானது. ஏப்ரல் 30, 2020 அன்று, பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.12 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.22 % இறக்கத்திலும் வர்த்தகமாயின.
ஆசியாவில் இன்று
இன்று மே 04, 2020, ஆசியாவில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி தவிர மற்ற எல்லா சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஹாங்காங்கின் ஹேங் செங் சந்தை சுமாராக 3.84 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
பங்கு விலை நிலவரம்
சிப்லா, சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் போன்ற முன்னணி பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற முன்னணி பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications