இன்று 38,000 புள்ளிகளைக் கூட கடந்து நிறைவடைய முடியாமல், 37,668 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது சென்செக்ஸ்.
17.9.20 38,979
18.9.20 38,845
21.9.20 38,034
22.9.20 37,734
23.9.20 37,668 என கடந்த ஐந்து நாட்களாக சென்செக்ஸ் தொடர்ந்து சரிந்து வருகிறது.
நேற்று மாலை, சென்செக்ஸ் 37,734 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 38,124 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ். இதையாவது தக்க வைத்துக் கொண்டு 38,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடையும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. 65 புள்ளிகள் இறக்கம் கண்டு 37,668 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலிவர், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், நெஸ்ட்லே போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமானது.
பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், என் டி பி சி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 12 பங்குகள் விலை ஏற்றத்திலும், 18 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் மொத்தம் 2,796 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,218 பங்குகள் ஏற்றத்திலும், 1,415 பங்குகள் விலை இறக்கத்திலும், 163 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 98 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (23 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 2.35 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.86 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.62 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் மிதந்து கொண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று (23 செப் 2020) ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி & இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், தைவானின் தைவான் வெயிடெட் போன்ற சந்தைகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்றவைகள் எல்லா ஏற்றத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications