நேற்று மாலை, சென்செக்ஸ் 38,034 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,200 புள்ளிகளில் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. அதன் பின் உச்சபட்சமாக 38,209 புள்ளிகள் வரை தான் அதிகரித்தது.
அதன் பின், 407 புள்ளிகள் சரிந்து 37,627 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நேற்றைக்கு போல் இல்லாமல், இன்று சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகள் 9 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக பங்குச் சந்தைகளின் நிலை என்ன? ஆசிய பங்குச் சந்தைகள் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 09 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,276பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 332 பங்குகள் ஏற்றத்திலும், 1,852 பங்குகள் விலை இறக்கத்திலும், 92 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 54 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
இண்டெக்ஸ்
இன்று பார்மா தவிர, மற்ற எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக ஆட்டோமொபைல், மீடியா, ரியாலிட்டி, பொதுத் துறை வங்கி போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் ஒரு சதவிகிதத்துக்கு மேல் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ரியாலிட்டி 2.87 % இறக்கம் கண்டு இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (22 செப்டம்பர் 2020) ஆசியாவில், எல்லா முக்கிய நாட்டுப் பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. தென் கொரியாவின் கோஸ்பி 1.88 % மற்றும் தைவானின் தைவான் வெயிடெட் 0.93 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள்
நேற்று (21 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 3.38 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 3.74 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 4.37 % இறக்கத்திலும் வர்த்தகமானது. நேற்று அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 0.13 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications