அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச்- 2023 ஆம் ஆண்டில் இருந்து அதானி குழுமம் முறைகேடான வகையில் தனது நிறுவனத்தின் பங்குகளின் விலையை உயர்த்துவது குறித்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வெளியிட்ட முதல் அறிக்கையின் வாயிலாக அதானி சாம்ராஜ்ஜியத்தின் மொத்த சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலருக்கு கீழ் சரிந்தது.
இந்த நிலையில் 2024 மே மாதம் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அதானி குழுமம் குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிர்வாகம் ஷோகாஸ் நோட்டீஸ் வெளியிட்டது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் ஆகஸ்ட் 10ஆம் தேதி காலையில், இந்தியா மிகப்பெரிய விஷயம் காத்திருக்கும் என்ற டிவீட் உடன் துவங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி இரவு அதிர்ச்சி அளிக்கும் அறிக்கையை வெளியிட்டது.

இந்த அறிக்கையில் அதானி குழும பங்குகளின் விலையை மறைமுகமாக உயர்த்த கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி வாயிலாக முறைகேடாக வெளிநாட்டு நிறுவனங்களைப் பயன்படுத்தியது குறித்து ஹிண்டன்பர்க் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வினோத் அதானி முறைகேடாகப் பயன்படுத்தும் ஒரு பண்டில் செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் முதலீடு செய்து பங்குகளை வைத்துள்ளதாக அறிவித்தது.
2023 அறிக்கையின் மூலம் ஹிண்டன்பெர்க் அதானி குழுமத்திற்கு சுமார் 100 பில்லியன் டாலர் வரையிலான இழப்பை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், தற்போதைய அறிக்கை எந்த அளவுக்கு மோசமாகப் பாதிக்கும் என்பது குறித்து முதலீட்டாளர்கள் மிகவும் அச்சத்துடன் இன்றைய வர்த்தகத்தைத் துவங்கியுள்ளனர்.
திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கும் போதே சரிவுடன் துவங்கினாலும் அச்சப்படும் அளவுக்கு இல்லை என்பது முதலீட்டாளர்களுக்கு ஒரு குட்நியூஸ் என்று தான் சொல்ல வேண்டும். 9.50 மணிக்கு சென்செக்ஸ் குறியீடு 277.81 புள்ளிகள் அல்லது 0.35 சதவீதம் சரிந்து 79,428.10 புள்ளிகளைத் தொட்டு உள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 112.15 புள்ளிகள் சரிந்து 24,255.35 புள்ளிகள் சரிந்து 24,255.35 புள்ளிகளை எட்டியுள்ளது.
ஆனால் இன்று பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முழு போக்கஸ்-ம் அதானி குழும பங்குகள் மீது இருக்கும் காரணத்தால், மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் அதானி குழுமப் பங்குகளின் நிலையைப் பார்ப்போம். இன்று காலை 9.50 மணிக்கு அதானி பங்குகளின் நிலவரம்.
அதானி எண்டர்பிரைசஸ் - 4.59 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் & SEZ - 3.08 சதவீதம் சரிவு
அதானி பவர் - 4.50 சதவீதம் சரிவு
அதானி எனர்ஜி சொல்யூஷன் - 3.29 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 3.63 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 6.38 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 4.25 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 2.15 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 0.81 சதவீதம் சரிவு
NDTV - 3.44 சதவீதம் சரிவு
சங்கி இண்டஸ்ட்ரீஸ் - 1.95 சதவீதம் சரிவு
அதானி குழுமத்தின் பங்குகள் 7 சதவீதம் வரை சரிந்துள்ளதால், அதானி குழுமத்தின் பங்கு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.53,000 கோடி இழப்பை சந்தித்துள்ளனர். அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பீடு ரூ.16.7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications