கடைசி வர்த்தக நாளான இன்றைய பங்குச் சந்தையில், முடிவு நேரத்தில் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 கடுமையாக சரிந்து முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்செக்ஸ் 1000 புள்ளிகளை தாண்டியும், நிஃப்டி50 290 புள்ளிகளை தாண்டியும் சரிவில் முடிந்தன. முக்கியமான அமெரிக்க வேலை வாய்ப்பு அறிக்கைக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் இந்த சரிவு காணப்பட்டது. அத்துடன் பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோ மற்றும் வங்கி உள்ளிட்ட முக்கிய துறைகள் சரிவை சந்தித்தன. முக்கிய நிதிப் பங்குகளும் சந்தையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகின.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் அதாவது 1.24% சரிந்து 81,183 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 293 புள்ளிகள் அதாவது 1.17% சரிந்து 24,852 இல் நிறைவடைந்தது. சென்செக்ஸில் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.5.2 லட்சம் கோடியை இழந்து ரூ.460.46 லட்சம் கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை சென்செக்ஸின் மொத்த சரிவுக்கு 538 புள்ளிகள் வரை பங்களித்தன. இவற்றுடன் கூடுதலாக, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, எல்&டி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை குறியீட்டின் வீழ்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை அளித்தன.

துறை வாரியாக, நிஃப்டி பொதுத்துறை வங்கி மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் முறையே 3.6% மற்றும் 2.2% சரிந்தன. ஆட்டோ, வங்கி, நிதிச் சேவைகள், மீடியா, ஐடி, ரியாலிட்டி மற்றும் நுகர்வோர் பொருள்கள் துறைகள் 0.8% முதல் 1.7% வரை சரிந்தன. உள்நாட்டில் கவனம் செலுத்திய ஸ்மால் கேப்கள் 1.25% சரிந்தன, அதே சமயம் மிட் கேப்ஸ் 1.6% சரிந்தன.


Click it and Unblock the Notifications