மத்தியில் பட்ஜெட் 2021 அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே, இந்திய சந்தைகள் தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வருகின்றன.
மூன்றாவது நாளாக இன்றும் ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக நிஃப்டி புதிய வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது. இதே சென்செக்ஸ் 50,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது.
இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 326.48 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 50,124.20 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 82.90 புள்ளிகள் அதிகரித்து 14,730.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
சந்தை தொடக்கம்
எனினும் சந்தையின் தொடக்கத்தில் சற்று சரிந்த நிலையில், தொடக்கத்தில் சென்செக்ஸ் 138.82 புள்ளிகள் அதிகரித்து, 49,658.90 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 36 புள்ளிகள் அதிகரித்து, 14,611.90 புள்ளிகள் ஆகவும் வர்த்தகமாகியது. இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் நிஃப்டி, பிஎஸ்இ குறியீடுகளில் அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் இந்தஸிந்த் வங்கி, சிப்லா, எம்&எம், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே மாருதி சுசூகி, கோடக் மகேந்திரா, எஸ்பிஐ, ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, எம்&எம், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்ரீஸ், பவர் கிரிட் கார்ப், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே மாருதி சுசூகி, கோடக் மகேந்திரா, எஸ்பிஐ, ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றமின்றி 72.97 ரூபாயாக தொடங்கியுளது. இது முந்தைய அமர்வில் 72.96 ரூபாயாக முடிவடைந்தது.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே சந்தை தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், ரூபாயின் மதிப்பு ஏற்றம் காணவிட்டாலும், மேற்கொண்டு சரியாமல் காணப்படுகிறது.
சென்செக்ஸ் தற்போது நிலவரம்
இதனையடுத்து தற்போது சென்செக்ஸ் 487 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 50,285 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 151.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,799 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது பட்ஜெட் மீதான நம்பிக்கை, சர்வதேச சந்தையின் எதிரொலி, அன்னிய முதலீடு வரத்து உள்ளிட்ட காரணங்களினால் சந்தை ஏற்றத்திலேயே காணப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications