மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 0.24 சதவீதம் அதாவது 77.52 புள்ளிகள் உயர்ந்து 31,924.41 ஆக இன்றைய சந்தை நேர முடிவில் வர்த்தகம் ஆனது.
இதுவே தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 0.28 சதவீதம் அதாவது 28.20 புள்ளிகள் உயர்ந்து 10,016.95 ஆக இன்று வர்த்தகம் செய்யப்பட்டது.
காரணம்
உள்நாட்டு நிதி நிறுவனங்களின் தொடர்ச்சியாகப் பங்குகளை வாங்கும் நோக்கம் அதிகரித்து இருப்பது மற்றும் இரண்டாவது காலாண்டில் சில்லறை வணிகத்தின் வளர்ச்சி மற்றும் ஆசிய சந்தைகளில் ஒரு உறுதியான போக்கு உள்நாட்டுப் பார்வையைத் தூண்டியுள்ளது.
லாபம்/நட்டம் அளித்த துறைகள்
மும்பை பங்கு சந்தைக் குறியீட்டின் படி பவர் நிறுவனப் பங்குகள் 0.85 சதவீதமும், உள்கட்டமைப்பு நிறுவனப் பங்குகள் 0.76 சதவீதமும், ஐடி நிறுவனப் பங்குகள் 0.71 சதவீதமும், டெக் நிறுவனப் பங்குகள் 0.62 சதவீதமும் இன்று உயர்வை அளித்துள்ளன.
இதுவே மறுபக்கம் ரியாலிட்டி பங்குகளில் 0.97 சதவீதமும், எஃப்எம்சிஜி துறை பங்குகள் 0.24 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.
டாப் 5 லாபம் அளித்த பங்குகள்
லுபின் (+ 1.99%), பவர்கிரிட் (+ 1.86%), ஆக்சிஸ் வங்கி (+ 1.74%), ரிலையன்ஸ் (+ 1.52%) மற்றும் கோல் இந்தியா (+ 1.44%)
நட்டம் அளித்த பங்குகள்
ஐசிஐசிஐ வங்கி (-0.96%), டாடா ஸ்டீல் (-0.93%), எச்.யூ.எல் (-0.83%), ஐடிசி (-0.82%) மற்றும் சன் பார்மா (-0.5%)


Click it and Unblock the Notifications