இதுவரை சென்செக்ஸ் இறக்கம் கண்டு கொண்டு தான் இருந்தது. ஆனால் இன்று அது சரிவாக மாறி இருக்கிறது.
இதற்கு முன்பு வரை கடந்த 24 ஆகஸ்ட் 2015 அன்று ஒரே நாளில் 1,624 புள்ளிகள் சரிந்தது தான் மிகப் பெரிய சரிவாக இருந்தது.
ஆனால் இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,941 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது. இத்தனை பெரிய புள்ளிகள் ஒரே நாளில் சரிவது இதுவே முதல் முறை.
2020-ல்
இந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, சென்செக்ஸ் ஐந்து முறை, ஒரே நாளில் 750 புள்ளிகளுக்கு மேல் சரிந்து இருக்கிறது. கடந்த பிப்ரவரி 28, 2020 அன்று ஒரே நாளில் 1,448 புள்ளிகள் சரிந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் சுமாராக 1941 புள்ளிகள் (5 %) சரிந்து இருக்கிறது.
சரிவு விவரம்
கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ் 37,576 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 36,950 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. இன்றைக்கு குறைந்தபட்சமாக 35,109 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. கொஞ்சம் தேறி, 35,109 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 1,941 புள்ளிகள் சரிந்து இருக்கிறது சென்செக்ஸ்.
நிஃப்டி
அதே போல, நேற்று மாலை நிஃப்டி 10,989 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 10,742 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 10,451 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நிஃப்டி இன்று 538 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.
30 பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 00 பங்குகள் ஏற்றத்திலும், 30 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,725 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 358 பங்குகள் ஏற்றத்திலும், 2,197 பங்குகள் இறக்கத்திலும், 170 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
52 வார ஏற்ற இறக்கம்
மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் மொத்த 2,725 பங்குகளில், 23 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 839 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
யெஸ் பேங்க், பாரத் பெட்ரோலியம், பார்தி இன்ஃப்ராடெல், ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஓ என் ஜி சி, வேதாந்தா, ரிலையன்ஸ், ஜி எண்டர்டெயின்மெண்ட், இண்டஸ் இண்ட் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
உலக காரணிகள்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74.06-க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அனலிஸ்டுகள் சொன்ன படி டாலர் மதிப்பு கூடிக் கொண்டு இருக்கிறது. இது இந்திய பொருளாதாரத்துக்கு இது நல்ல தல்ல. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 35.80 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இண்டெக்ஸ்
நிஃப்டியின் துறை சார்ந்த இண்டெக்ஸ்களில் எல்லா துறை சார்ந்த இண்டெக்ஸ்களும் பெரிய சரிவில் தான் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. இருப்பினும் பொதுத் துறை வங்கி, மீடியா, மெட்டல், தனியார் வங்கிகள் போன்ற துறை சார்ந்த இண்டெக்ஸ்கள் 5 %-க்கு மேல் இறங்கி வர்த்தகம் நிறைவடைந்தன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications