கடந்த அக்டோபர் 07, 2019-ல் இருந்து இன்று வரை சென்செக்ஸ் பெரிய சரிவுகளைக் காணாமல் அப்படியே ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. அதோடு கடந்த 08 ஜூலை 2019 அன்றுக்குப் பின் சென்செக்ஸ் 39,500 புள்ளிகளைத் தொடவே இல்லை. ஆனால் இன்று தொட்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது என்பது டெக்னிக்கலாக ஒரு வலுவான விஷயமாக இருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முஹுரத் வர்த்தக நாள் அன்று மாலை சென்செக்ஸ் 39,250 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 39,293 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஏற்றம் காணத் தொடங்கியது. அந்த ஏற்றம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான அதிகபட்ச புள்ளியாக 39,757 லெவல்களைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது இன்று வர்த்தகமாகத் தொடங்கிய விலையில் இருந்து 507 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.

தற்போது சென்செக்ஸில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. இன்று நிஃப்டியில் வர்த்தகமாகும் 50 பங்குகளில் 38 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பி.எஸ்.இ-யில் 2,332 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,295 பங்குகள் ஏற்றத்திலும், 881 பங்குகள் இறக்கத்திலும், 156 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. மொத்தம் 2,332 பங்குகளில் 69 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 85 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்களில் அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் எற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஆட்டோ, வங்கி, மெட்டல் போன்ற துறை இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகி மொத்த சந்தையையும் மேலே ஏற்றிக் கொண்டு இருக்கின்றன.
டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், யெஸ் பேங்க், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், யெஸ் பேங்க், வேதாந்தா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பார்தி இன்ஃப்ராடெல், பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட், கோட்டக் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications