புதிய உச்சத்தில் சென்செக்ஸ்..! இன்னும் 40,500-ஐத் தொடவில்லை..!

கடந்த அக்டோபர் 09, 2019-ல் இருந்து இன்று வரை சென்செக்ஸ் பெரிய சரிவுகளைக் காணாமல் அப்படியே ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 30, 2019 முதல் நவம்பர் 01, 2019 வரையான மூன்று வர்த்தக நாளிலும் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதோடு இன்று வேறு கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நாள் அன்று மாலை சென்செக்ஸ் 40,165 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 40,293 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சுமார் 130 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலெயே ஏற்றம் காணத் தொடங்கியது. அந்த ஏற்றம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான அதிகபட்ச புள்ளியாக 40, 483 புள்ளிகளைத் தொட்டு தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 318 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.

புதிய உச்சத்தில் சென்செக்ஸ்..! இன்னும் 40,500-ஐத் தொடவில்லை..!

நிஃப்டி இண்டெக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 11,890 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலையிலேயே நிஃப்டி 11,928 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஏற்றம் காணத் தொடங்கியது. அந்த ஏற்றம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான அதிகபட்ச புள்ளியாக 11,989 புள்ளிகளைத் தொட்டு தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 99 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. ஆக நிஃப்டியும் 12,000 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டுப் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 10 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பி.எஸ்.இ-யில் 2,345 பங்குகள் வர்த்தகமாகின்றன. 1,423 பங்குகள் ஏற்றத்திலும், 773 பங்குகள் இறக்கத்திலும், 149 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. 2,345 பங்குகளில் 70 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 77 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஆட்டோ, மீடியா தவிர மற்ற துறை சார் இண்டெக்ஸ்களும் எற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மெட்டல், ஐடி, பொதுத் துறை வங்கி போன்ற இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகி மொத்த சந்தையையும் மேலே ஏற்றிக் கொண்டு இருக்கின்றன.

பார்தி இன்ஃப்ராடெல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், வேதாந்தா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஜி எண்டர்டெயின்மெண்ட், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசூகி, இந்தியன் ஆயில், யெஸ் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+