சென்செக்ஸ், கடந்த 31 ஆகஸ்ட் 2020 அன்று ஜிடிபி செண்டிமெண்டால் 839 புள்ளிகள் ஒரே நாளில் சரிந்தது. சரிவுக்குப் பின், கொஞ்சம் ஏற்றம் கண்டு மீண்டும் 39,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஆனால் அந்த ஏற்றம் நிலைக்கவில்லை. மீண்டும் நேற்று 38,990 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து.
இன்று காலை சென்செக்ஸ் 38,325 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, வர்த்தக நேர முடிவில். 633 புள்ளிகள் இறக்கம் கண்டு, 38,357 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் ஒரே ஒரு பங்கு (மாருதி சுசூகி) மட்டுமே விலை ஏற்றத்திலும், 29 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் மொத்தம் 2,913 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,003 பங்குகள் ஏற்றத்திலும், 1,722 பங்குகள் விலை இறக்கத்திலும், 188 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 102 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
முன்பே சொன்னது போல, சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், மாருதி சுசூகி மட்டுமே 1.7 % ஏற்றத்தில் வர்த்தகமானது. மற்ற பங்குகள் எல்லாம் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், எஸ் பி ஐ, என் டி பி சி, பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (04 செப்டம்பர் 2020), ஏற்றத்தில் வர்த்தகமகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் தற்போது இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. லண்டனின் எஃப் டி எஸ் இ 0.01 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.01 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.65 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (04 செப்டம்பர் 2020) காலையில், பங்குச் சந்தைச் செய்தியில் சொன்னது போலவே, ஆசியாவில் அனைத்து பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. அதிகபட்சமாக ஹாங்காங்கிங் ஹேங்செங் சந்தை 1.25 சதவிகிதமும், தென் கொரியாவின் கோஸ்பி சந்தை 1.15 % இறக்கத்திலும் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications