கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 39,728 புள்ளிகளில் இருந்து 40,707 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. ஆனால் இன்று சென்செக்ஸ் இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்று (21 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,707 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,531 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.

வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,721 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில், நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 148 புள்ளிகள் இறக்கம் கண்டு 40,558 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
BSE நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 11 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 19 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,793பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,394 பங்குகள் ஏற்றத்திலும், 1,248 பங்குகள் விலை இறக்கத்திலும், 151 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 107 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் என் டி பி சி, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், டைட்டன், ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஆசிய சந்தைகள்
இன்று (22 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், ஹாங்காங்கின் ஹேங் செங், தைவானின் தைவான் வெயிடெட் தவிர, மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் இறக்கத்தில் வர்த்தகமாயின. ஜப்பானின் நிக்கி 0.70 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (22 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.18 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.07 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.26 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தடுமாற்றத்தோடு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications