சென்செக்ஸ் 41,000 புள்ளிகளைத் தொடுமா என ஆர்வத்தில் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு, இன்று ஏமாற்றமே மிஞ்சும் போலிருக்கிறது. இத்தனை நாள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ், இன்று 41,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகத் தொடங்கியும், தற்போது, இறக்கம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

நேற்று (14 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,794 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 41,048 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 41,048 புள்ளிகளைத் தொட்டது. தற்போது நேற்றைய குளோசிங் புள்ளியை விட 150 புள்ளிகள் இறக்கம் கண்டு 40,644 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (15 அக்டோபர் 2020) ஆசியாவில், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற எல்லா முக்கிய பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக ஹாங் காங் நாட்டின் ஹேங் செங் 1.09 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள்
நேற்று (14 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.58 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.12 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.07 % ஏற்றத்திலும் வர்த்தகமானது. அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 0.80 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 11 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மீதமுள்ள 19 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,403 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,195 பங்குகள் ஏற்றத்திலும், 1,059 பங்குகள் விலை இறக்கத்திலும், 149 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 76 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
டாப் 30 பங்குகள் ஏற்றம் இறக்கம்
ஏஷியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், என் டி பி சி, பஜாஜ் ஆட்டோ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
டெக் மஹிந்திரா, ஹெச் சி எல் டெக், டி சி எஸ், பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications