மும்பை: தொடர்ந்து புதிய உச்சத்தைக் கண்டு கொண்டு இருந்த சென்செக்ஸ், கடந்த நவம்பர் 07, 2019 அன்று 40,653 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதற்கு மேல் சந்தை புதிய உச்சங்களில் நிறைவடையவில்லை என முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது குபேர கடவுளுக்கு கேட்டு விட்டது போல. இன்று சந்தை மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
கடந்த வாரத்திலேயே, சென்செக்ஸ் டே சார்ட்டில் இந்த ஏற்ற டிரெண்டு முடிந்ததைக் குறிப்பிட்டு இருந்தோம். நவம்பர் 07 கேண்டில் சார்ட் ஒரு ஹேங்கிங் மேன் பேட்டனைக் காட்டுகிறது. அதோடு அதற்கு முந்தைய நவம்பர் 06 அன்றைய குளோசிங் புள்ளியை உடைத்துக் கொண்டு, அதன் ஓப்பனிங் புள்ளிகளைத் தொட்டு நவம்பர் 07 அன்று சந்தை வர்த்தகம் ஆகி இருந்தது. எனவே அடுத்து வரும் நாட்களில் சந்தை ஏற்றம் காண்பது கொஞ்சம் கடினம் தான் எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே, சந்தை கடந்த நவம்பர் 08 முதல் நேற்று வரை சந்தை இறங்கிக் கொண்டு தான் இருந்தது.

ஆனால் இன்று சென்செக்ஸ் அந்த பேட்டனையே உடைக்கும் அளவுக்கு தன் முந்தைய உச்ச விலையான 40,749 புள்ளிகளைக் கடந்து தான் இன்று வர்த்தகமாகவே தொடங்கி இருக்கிறது. எனவே, ஏற்றத்துக்கான பேட்டன் மீண்டும் சென்செக்ஸ் சார்ட்டில் உருவாகி இருக்கிறது.
சென்செக்ஸ் நேற்று மாலை 40,469 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,729 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 40,816 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய உச்ச புள்ளி சுமார் 347 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 12,004 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,038 உச்ச புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய உச்ச புள்ளிக்கு 98 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 19 பங்குகள் ஏற்றத்திலும், 11 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,330 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. 1,136 ஏற்றத்திலும், 1,040 பங்குகள் இறக்கத்திலும், 154 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,330 பங்குகளில் 39 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 98 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
ஜி எண்டர்டெயின்மெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், சன் பார்மா, ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பார்தி இன்ஃப்ராடெல், இந்தியன் ஆயில், ஈஷர் மோட்டார்ஸ், கோட்டக் மஹிந்த்ஹிரா, என் டி பி சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications