சென்செக்ஸ், கடந்த மார்ச் 2020 சரிவுக்குப் பின், கடந்த 26 ஆகஸ்ட் 2020 அன்று தான் முதல் முறையாக 39,000 புள்ளிகளைக் கடந்து நிறைவடைந்தது.
அதன் பின் 31 ஆகஸ்ட் 2020 அன்று 40,010 புள்ளிகள் வரைத் தொட்டு வர்த்தகமானது. இருப்பினும் 31 ஆகஸ்ட் 2020 அன்று, சென்செக்ஸ் 38,628 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
01 செப்டம்பர் 2020 அன்று 38,900 புள்ளிகளிலும், நேற்று (02 செப்டம்பர்) 39,086 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றும் 39,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடையும் என எதிர்பார்த்த வர்த்தகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இன்று சென்செக்ஸ் 38,990 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
ரவுண்ட் அப்
இன்று மும்பை பங்குச் சந்தைகளில் எத்த்னை பங்குகள் வர்த்தகமாயின, அதில் எத்தனை பங்குகள் விலை ஏற்றத்திலும், எத்தனை பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் இருக்கும் பங்குகளின் விலை நிலவரம் என்ன? உலக பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலவரம் இன்று
நேற்று மாலை 39,086 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ். இன்று காலை 39,165 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 39,236 புள்ளிகள் வரைத் தொட்டு வர்த்தகமான சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் 38,990 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட 95 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 13 பங்குகள் விலை ஏற்றத்திலும், 17 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் மொத்தம் 2,869 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,481 பங்குகள் ஏற்றத்திலும், 1,205 பங்குகள் விலை இறக்கத்திலும், 183 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 99 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
பார்தி ஏர்டெல்
க்ராசிம்
டைடன் கம்பெனி
யூ பி எல்
விப்ரோ
போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ஐசிஐசிஐ பேங்க்
பார்தி ஏர்டெல்
ஹிண்டால்கோ
ஆக்ஸிஸ் பேங்க்
கோட்டக் மஹிந்திரா
போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (03 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.92 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.9 % எற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.36 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (03 செப்டம்பர் 2020, வியாழன்), ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, தைவானின் தைவான் வெயிடெட் மற்றும் தென் கொரியாவின் கோஸ்பி போன்ற பங்குச் சந்தைகள் தவிர, மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம், இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 0.59 % இறக்கம் கண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications