தடுமாறும் சென்செக்ஸ்! சந்தை நிலை என்ன?

கடந்த சில வாரங்களாக சென்செக்ஸ் ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது. அந்த ஏற்றம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

விளைவு இன்று சென்செக்ஸ் 32,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகிறது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ் இன்று ஏற்றம் காண முடியாமல் தவிக்கிறது. இன்று இந்திய பங்குச் சந்தைகளின் நிலை என்ன?

சென்செக்ஸ் நிலை

சென்செக்ஸ் நிலை

ஏப்ரல் 18, 2020, மாலை சென்செக்ஸ், 31,588 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 32,056 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. நல்ல கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், சென்செக்ஸ் அந்த ஏற்றத்தை பிடித்துக் கொள்ளவில்லை. இந்த 32,056 தான் சென்செக்ஸின் இன்றைய அதிகபட்ச புள்ளியே என்பதும் குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்ச புள்ளியாக 31,540 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. தற்போது சென்செக்ஸ் சுமாராக 31,767 புள்ளிகளில் 179 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

சென்செக்ஸ் பி எஸ் இ

சென்செக்ஸ் பி எஸ் இ

சென்செக்ஸின் 30 பங்குகளில் 13 பங்குகள் ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,046 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,249 ஏற்றத்திலும், 675 பங்குகள் இறக்கத்திலும், 122 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

மேற்கத்திய நாடுகளிலும் புனித ஏப்ரல் 17, 2020 அன்று அமெரிக்காவின் நாஸ்டாக் மீண்டும் 1.38 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 2.82 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 3.42 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 3.15 % ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

இன்று ஏப்ரல் 20, 2020 திங்கட்கிழமை, வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் ஆசிய சந்தைகளில்
சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஜப்பானின் நிக்கி,
ஹாங்காங்கின் ஹேங்செங், தைவானின் தைவான் வெயிடெட்,
தென் கொரியாவின் கோஸ்பி... தவிர மற்ற சந்தைகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

இந்திய சந்தை சரிவு காரணம்

இந்திய சந்தை சரிவு காரணம்

ஆசிய பங்குச் சந்தைகள் ஜர்க் அடிப்பது, இந்திய பங்குச் சந்தைகளின் இறக்கத்துக்கு ஒரு காரணமாகச் சொல்லலாம். அதோடு கொரோனா பரவல், மெல்ல இந்தியாவில் அதிகரித்து வருவதும், இந்திய சந்தைகள் தேக்கம் காண ஒரு காரணமாக இருக்கலாம். எனவே பங்குச் சந்தை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உஷாராக இருக்கவும்.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

டாடா மோட்டார்ஸ், ஜி எண்டர்டெயின்மெண்ட், இன்ஃபோசிஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், இந்தியன் ஆயில் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பார்தி இன்ஃப்ராடெல், ஐடிசி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், பார்தி ஏர்டெல், மாருதி சுசூகி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+