சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக 40,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து வருகிறது.
நேற்று (12 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,593 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,592 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,786 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில் 31 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,625 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
மும்பை பங்குச் சந்தை நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 11 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 19 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,814 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,147 பங்குகள் ஏற்றத்திலும், 1,486 பங்குகள் விலை இறக்கத்திலும், 181 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 101 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் ஹெச் சி எல் டெக், கோட்டக் மஹிந்திரா பேங்க், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. டைட்டன், சன் பார்மா, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (13 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.37 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.25 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.29 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தடுமாற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று (13 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, தைவானின் தைவான் வெயிடெட், தென் கொரியாவின் கோஸ்பி தவிர, மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாயின. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 0.77 % ஏற்றத்தில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications